இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்சவின் சுதந்திர தின உரையில் இனப்பிரச்சினை பற்றிய வார்த்தையில்லை

இராணுவச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம்
பதிப்பு: 2020 பெப். 04 22:49
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 07 01:02
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
ஸ்ரீலங்காப் பொதுஜன முன்ணணி அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்திய இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பொலிஸ் சேவையில் தமிழர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்ற அறிவிப்பைத் தவிர வேறு முக்கியமான அறிவுப்புகள் எதுவும் தமிழ் மொழியில் இடம்பெறவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிகழ்த்திய உரையில் இனப்பிரச்சினை என ஒன்று இருப்பதாகவோ அல்லது போரின் பின்னரான சூழலில் நிரந்தர அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்றோ எதுவுமே கூறவில்லை. மாறாக இன அடிப்படையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாதென்றும் இனவாத அமைப்புகளுக்கு இடமில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச தனது உரையில் கூறியிருந்தார்.
 
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிகழ்ச்சிரலை ஏற்றுச் செயற்பட்டதனால், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இயல்புக்குத் தமிழ் மக்கள் கட்டுப்பட வேண்டுமென எதிர்பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன

சுதந்திர தின நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இராணுவ நிகழ்வுபோன்றே இன்றைய சுதந்திர தின நிகழ்வு அமைந்ததாக கொழும்பில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.

சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாதமை தொடர்பாக மலையகத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கண்டனம் வெளியிட்டிருந்தனர். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் கவலை வெளியிட்டிருந்தார்.

தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

ஆனால் 2015 ஆம் ஆண்டில் இருந்து சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து செயற்பட்டமைதான் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிகழ்ச்சிநிரலை ஏற்றுச் செயற்பட்டதனால், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இயல்புக்குத் தமிழ் மக்கள் கட்டுப்பட வேண்டுமென எதிர்பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.