இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல்

மகிந்த இந்தியா பயணம்- நாளை மோடியுடன் சந்திப்பு

பொருளாதார உடன்படிக்கைகள் நிதியுதவிகள் குறித்துப் பேசப்படவுள்ளன
பதிப்பு: 2020 பெப். 07 23:13
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 08 22:35
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#india
இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நான்கு நாள் பயணமாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இந்தியாவுக்குச் சென்றுள்ளார். பிரதமராகப் பதவியேற்று முதன் முதலாக இந்தியாவுக்குச் சென்ற மகிந்த புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகள் பலரைச் சந்திக்கவுள்ளார். புதுடில்லி விமானநிலையத்தில் மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சஞ்சய் தோட்ரே மகிந்த ராஜபக்சவை பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். நாளை வெள்ளிக்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்திக்கும் ராஜபக்ச, நண்பகல் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்.
 
பின்னர் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வரவேற்பு அளித்து விருந்துபசாரம் வழங்கவுள்ளார். இந்த விரு்ந்துபசாரத்தில் இந்தியப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்துகொள்வர் எனக் கூறப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டாம் வாரம் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்சவும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது இலங்கைக்கு 450கோடி டொலர் வழங்கப்படுமென புதுடில்லியில் உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. நரேந்திரமோடியுடனான சந்திப்பில் இலங்கைக் கடல்சார் பாதுகாப்பு, இந்தோ பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இந்தியாவுக்குச் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இந்திய- இலங்கை உறவுகள் குறித்தும் பொருளாதாரரீதியாகவும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இந்தியாவின் ஆலோசனையோடு இலங்கை செயற்பட வேண்டுமென்ற அழுத்தங்களும் அதற்குரிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவது குறித்தும் பேசப்படலாமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்ப்பார்க்கின்றன.