ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு?

இலங்கையின் ஒற்றையாட்சி மாறாது- டில்லியில் மகிந்த ராஜபக்ச

கோட்டா- மகிந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்ற தொனியில் மோடியிடம் எடுத்துரைப்பு
பதிப்பு: 2020 பெப். 08 22:35
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 10 01:55
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கம் இந்திய மத்திய அரசுடன் பொருளாதார உடன்படிக்கைகள். நிதியுதவிகள் குறித்துப் பேச்சு நடத்தி வருகின்றது. இந்தோ பசுபிக் பிராந்திய நலன் அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு அமைவாக இலங்கையுடனான உறவுகளைப் பேணும் புதிய அணுகுமுறைகளின் வெளிப்பாடாகவே கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்று முதன் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்தார் கோட்டாபய ராஜபக்ச. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவும் நான்கு நாள் பயணமாக சென்ற வெள்ளிக்கிழமை இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.
 
வடக்குக்- கிழக்கு இணைப்பு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற பேச்சுக்கள் எதனையும் நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் குறிப்பிடவில்லை என்றும் அது பற்றிய அழுத்தங்கள் எதனையும் இந்திய மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்

ஹைதராபத் நகரத்தில் அமைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்சவும் நரேந்திரமோடியும் சந்தித்து உரையாடியிருந்தனர். ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய உயர் அதிகாhரிகளையும் மகிந்த ராஜபக்ச சந்தித்ததர்.

ஈபிடிபியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கோட்டாபய ராஜபக்ச சென்ற டிசம்பர் மாதம் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது இலங்கைக்கு நாநூற்றி ஐம்பது மில்லியன் டொலர்கள் வழங்க இந்தியா இணங்கியிருந்தது. அந்த உதவிகளை உடனடியாக வழங்குவதாக மகிந்த ராஜபக்சவிடம் இந்தியா இன்று சனிக்கிழமை உறுதியளித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளதாக மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கைக்கு வேண்டிய உடனடி உதவிகள் குறித்து மகிந்த ராஜபக்ச புதுடில்லியில் விளக்கமளித்திருந்தார்.

இந்தியா வழங்கும் கூடுதல் நிதியுதவிகளைப் பொறுத்தே, இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்புகளில் இந்தியாவுக்கு இலங்கை உதவியளிக்குமென கோட்டாபய ராஜபக்ச சென்ற டிசம்பர் மாதம் புதுடில்லியில் வைத்துக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை புதுடில்லிக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச ஈழத் தமிழர் விவகாரத்தில் புதிய அரசாங்கம் கையாளவுள்ள அணுகுமுறைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டுமென உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பு மாறாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் விரும்புவதாகவும் அதற்குரியவாறு புதிய அரசாங்கம் அரசியல் தீர்வை ஏற்படுத்தும் எனவும் மகிந்த ராஜபக்ச அங்கு கூறியதாகப் புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.

வடக்குக்- கிழக்கு இணைப்பு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற பேச்சுக்கள் எதனையும் நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் கடுமையாகக் குறிப்பிடவில்லை என்றும் அது பற்றிய அழுத்தங்கள் எதனையும் இந்திய மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.