முன்னாள் முதலமைச்சர்

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி சமகால பூகோள அரசியலைக் கருத்தில் கொண்டதா?

கொள்கைக்கான கூட்டு என்கிறார் சுரேஸ்
பதிப்பு: 2020 பெப். 09 23:16
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 15 04:02
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. காலை 9.30க்கும் 11.30 க்கும் இடையிலான சுப நேரத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணி ,ஈபிஆர்.எல்.எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச் சந்திரன், சிறிகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோர் தத்தமது கட்சிகள் சார்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
 
இந்தப் புதிய கூட்டணி தொடர்பாக நீண்ட நாட்களாகப் பேசப்பட்ட போதும் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் பின்னர் ஏற்பட்ட இணக்கத்தையடுத்து புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டணி தமிழ் மக்களின் கொள்கை சார்ந்து செயற்படுமென விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டணி செயற்படுமென சுரேஸ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோரும் கூறியுள்ளனர்.

ஆனால் வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தமது கூட்டணி போட்டியிடும் என்பது குறித்து இதுவரை எதுவுமே கூறப்படவில்லை. இதேவேளை, தற்போதைய பூகோள அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டதா என்ற கேள்விகள் தமிழ் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டாக மாத்திரமே இந்தக் கூட்டணி அமைந்துள்ளதா என்று அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.