முன்னாள் முதலமைச்சர்

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி கொள்கைக்கானதாகத் தெரியவில்லை- ஜோதிலிங்கம்

கூட்டுக் கட்சிகளிடையே சம பங்காளிகள் என்ற அந்தஸ்த்தும் பேணப்படவில்லை என்றும் கூறுகிறார்
பதிப்பு: 2020 பெப். 10 21:03
புதுப்பிப்பு: பெப். 15 21:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கொள்கையோடு செயற்படுகின்றதா அல்லது இது ஒரு தேர்தல்கால கூட்டா என்பது தொடர்பாக பொறுத்திருந்தே அவதானிக்க வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தக் கூட்டணியில் இணைந்துள்ள சுரேஸ் பிரேமச் சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் இல்லை என்றும் வெறுமனே உதிரிக் கட்சிகள் எனவும் அவதானிகள் கூறுகின்றனர்.
 
விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி சென்ற ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் புதிய கூட்டணி தொடர்பாக தாயகப் பிரதேச மக்களிடையே பல்ிவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டே இந்த புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

தமிழ் மக்கள் கூட்டணி ,ஈபிஆர்.எல்.எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச் சந்திரன், சிறிகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோர் தத்தமது கட்சிகள் சார்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

கொழும்பை மையமாகக் கொண்ட பௌத்த தேசியவாதம் மேலோஙெ்கியுள்ள சூழலில் அந்த பௌத்த தேசியவாதத்தையும் தற்போதைய புவிசார் அரசியலையும் எதிர்கொள்ளக் கூடிய அளவுக்கு இந்தப் புதிய கூட்டணி செயற்படுமா என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் புதிய கூட்டணி கொள்கைக்கான கூட்டணியாகத் தெரியவில்லை என்றும் கூறிய ஜோதிலிங்கம் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கூட்டணிகளும் தோல்வியடைந்தாகவும் கூறியுள்ளார்.

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே சம பங்காளிகள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த கூட்டணியில் தேர்தலை நோக்கிய தொகுதிப் பங்கீடுகள் மாத்திரமே முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜோதிலிங்கம் கூறியுள்ளார்.

கொள்கை ரீதியான கூட்டணியாகச் செயற்பட வேண்டும் கட்சிகளிடையே சம பங்காளிகள் என்ற அந்தஸ்த்து இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை விக்னேஸ்வரன் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.