போரின் போதும் அதற்குப் பின்னரான சூழலிலும்

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ்- கொழும்பில் ஆர்ப்பாட்டம்

நீதி மாத்திரமே தேவையென்று சமவுரிமை இயக்கம் வலியுறுத்தல்
பதிப்பு: 2020 பெப். 11 23:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 15 04:00
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் சரணடைந்தும் கையளிக்கப்பட்டும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் எவ்வாறு மரணச் சான்றிதழ் வழங்க முடியுமென சமவுரிமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சமீபத்தில் கூறியிருந்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்ட சமவுரிமை இயக்கம், ஜனாதிபதி அவ்வாறு கூறியதை ஏற்க முடியாதென்றும் தெரிவித்துள்ளது.
 
இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் நிவாரணம் கூட அவசியம் இல்லையென்றும் அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

மரணச் சான்றிதழ் வழங்கவுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி கூறிய கருத்துக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அருட்தந்தை சக்திசேவல் கூறினார்.

மரணச் சான்றிதழ் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கூறிய கருத்துக்கு வடக்குக் கிழக்கில் உள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் சங்கமும் வன்மையாகக் கண்டனம் வெளியிட்டிருந்தது.

மரணச் சான்றிதழை ஏற்க முடியாதென்றும் நிவாரணங்கள் கூடத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.