இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள்- மகிந்த அணி மீது குற்றச்சாட்டு

ரணில்- சஜித் நேரில் சந்தித்து உரையாடியும் பயனில்லை
பதிப்பு: 2020 பெப். 15 22:38
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 16 20:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#sajithpremadasa
இலங்கையின் எதிர்வரும் ஏப்பிரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பான முரண்பாடுகள் நீடித்துச் செல்;கின்றன. நேற்று வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரிடையே இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. கட்சியின் யானைச் சின்னத்திலேயே போட்டியிடுவது என்றும் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே செயற்படுவாரென்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் சஜித் பிரேமதாசவிடம் கூறியுள்ளனர்.
 
எனினும் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்து அதற்கு சஜித் பிரேமதாச தலைவராகச் செயற்பட வேண்டும் என்றும் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் ஆசுமாரசிங்க. யானைச் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடுவது என்றும் விரும்பியவர்கள் இணையலாம் என்றும் உடன்படாதவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியே போக முடியும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி நன்கு பயன்படுத்துவதாகவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரிடையே மேலும் கருத்து மோதல்களை உருவாக்கிவிடுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.