இலங்கை ஒற்றையாட்சி அரசின்

ஆட்சேபனை- அமைச்சர் தினேஸ் அமெரிக்கத் தூதுவரை அழைத்து விளக்கம்

நிதியுதவிகள் தொடருமென தூதுவர் தெரிவிப்பு
பதிப்பு: 2020 பெப். 16 21:23
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 16 23:02
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#US
இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவருடைய குடும்பம் மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை தொடர்பாக இலங்கை அரசாங்கம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், (Alaina B. Teplitz) தூதரக அதிகாரிகளைச் சந்தித்து பயணத் தடை தொடர்பாக இலங்கையின் ஆட்சேபனையை தெரிவித்துள்ளார். கொழும்பு வெளிவிவகார அமைச்சுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அழைக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் உரையாடிய அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இந்தப் பயணத் தடை புதிய அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
 
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவருடைய குடும்பம் மீதான பயணத் தடை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அறிவித்த பின்னர் சென்ற வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சு இலங்கையின் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு நேரடியாகவே ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போரில் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் நன்மதிப்பைப் பேணியவர் என்று அமைச்சர் தினேஸ் புகழாரம் சூட்டி அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கமளித்தாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் இலங்கையின் ஆட்சேபைனையை அமெரிக்கத் தூதுவர் ஏற்கவில்லை என்றும் எனினும் அமெரிக்க இலங்கை உறவில் மாற்றம் இருக்காதென்றும் உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுமெனவும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் கூறியதாக அறிய முடிகின்றது.

இந்தச் சந்திப்பும் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் பேசப்பட்ட வியடங்கள் எதுவும் கூறப்படவில்லை.

சந்திப்புத் தொடர்பாக கொழும்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகம் ஊடகங்களுக்கு எதுவுமே கூற விரும்பவில்லை.