வடமாகாணத்தில்

மக்களின் உடனடித் தேவைகளை நிறைவு செய்ய வன்னித் தமிழ் மக்கள் ஒன்றியம் உதயம்

தேர்தல் அரசியல் நோக்கம் அல்ல என்றும் தெரிவிப்பு- அரசியல் பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லை
பதிப்பு: 2020 பெப். 16 23:17
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 16 23:33
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடமாகாணத்தில் வன்னித் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முற்பகல் 11 மணியளவில் பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றது. ஒன்றியத்தின் ஸ்தாபகரு்ம, ஊடக பேச்சாளருமான எம்.ஏ.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறிதத் நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர். குறிதத் அலுவலகத்தினை கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து திறந்து வைத்தனர். இவ்வலுவலகம் கிளிநொச்சி பாரதிபுரம் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய குறித்த ஒன்றியத்தின் ஸ்தாபகரு்ம, ஊடக பேச்சாளருமான எம்.ஏ.யோகேஸ்வரன், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பி்ரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்டார்.
 
போரின் பின்னரான சூழலில் அரசியல், பொரளாதார ரீதியாக மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே அவற்றை உரிய முறையில் செயற்படுத்தும் நோக்கில் வன்னிப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட இந்த ஒன்றியம் அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் மக்களிற்கு தேவையானயான அபிவிருத்தி மற்றும் அரசியற் பணிகள் கிராம மற்றும் மாவட்ட மட்டங்களிலிருந்து முன்னெடுக்க, இளையோர் சமூகத்தை ஒன்றிதணக்கும் முயற்சியின் முதற்படியே இந்த ஒன்றியம் எனவும் அவர் கூறினார்.

மறைந்த முன்னாள் பாரதிபுரம் மலையாளபுரம் ஸ்தாபகர் அமரர். மாணிக்கம் கணபதியின் நற் பணிகளை மையமாக் கொண்டு இந்த ஒன்றியம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அரசியல் நோக்கம் அல்ல எனவும் இதன் அங்கத்தவர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் பின்னால் திரிந்து அலைவதை விட இந்த ஒன்றியத்தின் செயற்பாடுகள் மூலம் சாதாரண பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதே இதன் பிரதேன நோக்கம் எனவும் இதன் அங்கத்தவர்கன் தெரிவித்தனர்.