இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குப் பாரிய

பொருளாதார நெருக்கடி- 367 பில்லியன்களுக்குக் குறை நிரப்புப் பிரேரணை

வரவு செலவுத் திட்டமும் சமர்ப்பிக்க முடியாத நிலைமை
பதிப்பு: 2020 பெப். 17 11:06
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 17 11:16
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் வெளிநாட்டுக் கடனுதவிகளும் மறுக்கப்பட்டு வருவதாக இலங்கை நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்ச சென்ற வாரம் இந்தியாவுகுப் பயணம் செய்திருந்தால் ஏற்கனவே வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த நாநூற்றி ஐம்பது மில்லியன்களைக் கையளிக்க இந்தியா இணங்கியுள்ளது. ஆனாலும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்கள் நிதி வழங்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாரிய நிதி நெருக்கடி ஒன்றை எதிர்நோக்கியுள்ளதாகவும் நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
 
இவ்வாறானதொரு நிலையில் குறைநிரப்புப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்காகச் செலுத்தப்பட வேண்டிய 367 பில்லியன் ரூபாய்களுக்காகவே இந்தக் குறை நிரப்புப் பிரேரணையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறுகிறார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். அதேவேளை, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஏப்பிரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னரே வரவு செலவுத் திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க முடியுமென அரசாங்கம் கூறுகின்றது.