நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னரான சூழலில்

ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலகும் முடிவு நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டதா?

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச இதுவரை அதிகாரபூர்வமாகக் கருத்துக் கூறவில்லை
பதிப்பு: 2020 பெப். 20 09:29
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 20 11:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை தொடர்பான ஜெனீவா மனித உரிமைச் சபையின் 30/1 தீர்மானத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு நாடாளுமன்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. எனினும் மகிந்த ராஜபக்சவின் இந்த அறிவிப்புக் குறித்து ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் இதுவரை அதிகாரபூர்வமாகக் கருத்துக் கூறவில்லை. மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் போது 2015 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் 30/1 தீர்மானம் நிறவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் இலங்கைப் படையினரை சர்வதேச அரங்கில் காட்டிக்கொடுக்கும் செயல் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்து மகிந்த ராஜபக்ச தரப்புக் குற்றம் சுமத்தியிருந்தது.
 
இந்த நிலையில் தற்போது புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள மகிந்த ராஜபக்ச தரப்பு இந்தத் தீர்மானத்தில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி கூறுகின்றது.

எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உரையாற்றவுள்ளார். 30/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அங்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

அதேவேளை, இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்துள்ள பயணத் தடை தொடர்பாகவும் கண்டனம் வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இலங்கைப் படையினரை சர்வதேச அரங்கில் காட்டிக்கொடுக்க புதிய அரசாங்கம் இடம்கொடாது என்றும் கூறியுள்ளார்.

இந்த மாதம் இறுதியில் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகி ஒரு மாதத்திற்குத் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. இலற்கையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவுத் அதனை இலங்கை அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தாமை குறித்தும் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இலங்கை மீதான இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து வெளியேறியுள்ளது. சீனாவின் உறுப்புரிமைக் காலம் சென்ற ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தள்ளது.

பிரித்தானியாவின் பதவிக் காலமும் சென்ற ஆண்டு முடிவடைந்துள்ளது. இந்த நிலையிலேயே குறித்த தீர்மானத்தில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.