ஜெனீவா மனித உரிமைச் சபையின்

தீர்மானங்களில் இருந்து புதிய அரசாங்கம் விலகியமை குறித்த மகாநாயக்கத் தேரர்கள் வரவேற்பு

ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக அறிக்கை வெளயிடப்படவில்லை
பதிப்பு: 2020 பெப். 27 23:58
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 28 10:24
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களில் இருந்து புதிய அரசாங்கம் வலிகியமை தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியும் இந்தப் பிரேரணைக்கு 2015 ஆம் ஆண்டு இணை அனுசரனை வழங்கிய முன்னாள் அரசாங்கத் தரப்பினரான ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக கருத்துக்கள் எதனையும் கூறவில்லை. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. மற்றும் கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் கொழும்பில் உள்ள ஊடகங்களிடம் கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனால் பிரதான கட்சி என்ற அடிப்படையிலும் 30.1 தீர்மானத்துக்குப் பொறுப் கூற வேண்டியவர்கள் என்ற முறையிலும் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளயிடப்படவில்லை.
 
அதேவேளை, மற்றுமொரு பிரதான சிங்களக் கட்சியான ஜே.வி.பி வரவேற்றுள்ளது. ஆனால் தீர்மானத்தில் இருந்து முற்றாக வெளியேறுவதற்கான மாற்றுத் திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்வைக்கவில்லையென ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத்குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் வெளிவரும் சிங்கள நாளேடுகள் பலவற்றில் வரவேற்புத் தெரிவிக்கப்பட்டு ஆசிரியர் தலையங்கங்களும் எழுதப்பட்டுள்ளன. சில ஆங்கில நாளேடுகள் விலகி செய்திக்கு முக்கியத்தும் கொடுத்துள்ளன.

தமிழ் பயங்கரவாதிகளை அழித்த இலங்கை இராணுவத்தைக் காப்பாற்ற வேண்டியது இலங்கை மக்களின் கடமை என்று திவயின என்ற சிங்கள நாளேட்டில் சிறப்புக் கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது. கன்டி மாகாநாயக்கத் தேரர்கள். பௌத்த சங்கங்கள் அனைத்தும் வரவேற்றுள்ளன.