இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில்

வடக்குக் கிழக்குத் தயாகத்தில் பிரிவினைகளை உருவாக்கப் பல சுயேற்சைக் குழுக்கள்

கொழும்பு நிர்வாகம் திட்டமிட்டுச் செயற்படுவதாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2020 மார்ச் 01 22:21
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 02 23:01
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கை நாடாளுமன்றம் நாளை திங்கட்கிழமை நள்ளிரவு கலைக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள நிலையில் 19 ஆவது திருத்தச் சடடத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் முடிவில் நாளை கலைப்படவுள்ளது. சென்ற ஆண்டு நவமபர் மாதம் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஆனாலும் சாதாரண பெரும்பான்மைப் பலம் கூட இல்லாத நிலையிலும் சிறுபான்மை அரசாங்கமாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன கட்சி ஆட்சி அமைத்திருந்தது. மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவி வகிக்கிறார். இந்த நிலையில் ஆட்சியமைத்து நான்கு மாதங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.
 
வேட்புமனுத் தாக்கல்கள் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பித்து 19 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்கப்படுமென இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய முக்கள் முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடவுள்ளன.

ஈழத் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் பல சுயேற்சைக் குழுக்கள் கொழும்பு நிர்வாகத்தினால் திட்டமிடப்பட்டுக் களமிறக்கப்படவுள்ளன. ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினனைகளை உருவாக்கும் நோக்கிலும் சுயேற்சைக் குழுக்கள் களமிறப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

ஆனால் ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கிலும் சிங்களப் பொரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் கலாச்சாரத்தை ஏற்படும் வகையிலும் செயற்படும் சக்திகளை அடையாளம் கண்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் பிரதான தமிழ் கட்சிகளின் செயற்பாடுகளில் அதிருப்பதியடைந்துள்ளதாகவும் தாயக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சுமார் 5.5 பில்லியன் ரூபாய் செலவுகள் ஏற்படும் என்றும் ஆனால் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டால் 7.5 பில்லியன் செலவுவரை ஏற்படும் என்றும் இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தற்போது தேர்தல்களை நடத்துவதற்கான எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் இல்லை என்று கூறியுள்ளார்.