இலங்கை ஒற்றையாட்சி அரசில் மாறி மாறி ஆட்சியமைத்து வரும்

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது- சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் அணி

கோட்டாபய மகிந்த தரப்புக்கு வெற்றியை உறுதிப்படுத்த ரணில் முற்படுகிறார்- மனோ குற்றச்சாட்டு
பதிப்பு: 2020 மார்ச் 02 23:49
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 03 00:06
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசில் மாறி மாறி பதவிக்கு வரும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. கட்சியின் மூத்த உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணி இன்று திங்கட்கிழமை உருவாகியுள்ளது. சஜித் பிரேமதாச முன்னிலையில் ஏனைய கட்சிகள் இன்று கைச்சாத்திட்டுள்ளன. ஏப்பிரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை மையமாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணி உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்து. இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவுடன் சஜித் பிரேமதாச அணி கடந்த சில நாட்களாகத் தீவிரமாகப் பேச்சு நடத்தியிருந்தது.
 
ஆனாலும் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க மறுத்துவிட்டதாகவும் இதனால் ஐக்கிய மக்கள் சக்த என்ற புதிய அரசியல் அணியை உருவாக்கித் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதன் யானைச் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் அன்னம் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணியுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணையாது என்றும் க்சியின் பிரதித் தலைவர் ரவிகருணாநாயக்கா இன்று செய்தியளர்களிடம் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். ஆகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட மலையகத் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்துள்ளன.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தனிச் சிங்களக் கட்சியாகவே யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவன்ச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இவ்வாறான செயற்பாடுகள் கோட்டாபய. மகிந்த தரப்புக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசள், ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தியுள்ளார்.