தமிழ் இனப்படுகொலை தொடர்பாக

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்துமாறு கோரி மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு

ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு மகஜர் அனுப்பவும் நடவடிக்கை
பதிப்பு: 2020 மார்ச் 03 13:36
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 03 15:54
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
போர்க்குற்ற விசாரணை, தமிழ் இன அழிப்புத் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சுட்டிக்காட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையைக் கோரி வந்ததாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகள் இந்தக் கோரிக்கையை வற்புறுது்தி வந்தபோதும் அந்தக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு கால நீடிப்பு வழங்கப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
 
ஜெனீவா மனித உரிமைச் சபையின் 43 ஆவது கூட்டத்தொடரில் சென்ற புதன்கிழமை உரையாற்றிய இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன 30.1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். சர்வதேச நாடுகளின் இணக்கப்பாடு ஒன்றை இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக புறம்தள்ளியுள்ளதாகவும் உறவினர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இனியும் காலம் தாழ்த்தாது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோருதல் மற்றும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் நீதி மன்றுக்கு அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் விசாரணக்காக ஐ.நா.மனித உரிமைகள் சபை பரிந்துரை செய்ய வேண்டுமெனவும் உறவினர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு வலியுறுத்தி மாபெரும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் ஒன்பதாம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளதாகவும் உறவினர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வடக்குக் கிழக்கு மாகாணத்தில் அனைத்து உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் இந்தப் போராட்டத்திற்கு - மத குருக்கள்,பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு தங்கள்ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேசக் குற்ற்வியல் நீதிமன்ற விசாரணை நடத்துமாறு கோரி ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு மகஜர் அனுப்புவும் திட்டமிட்டுள்ளதாக உறவினர்கள் சங்கம் கூறியுள்ளது.