ஈழ அரசியல் விடுதலைப் போராட்டத்தில் இடம்பெற்ற

இன அழிப்பை முன்னிலைப்படுத்தி சுயாட்சி அதிகாரத்தை தமிழர்கள் பெற வேண்டும்- சட்டத்தரணி காண்டீபன்

ஐ.நா நிபுணர்குழு அறிக்கைகள் சர்வதேச விசாரணைகள் அல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்
பதிப்பு: 2020 மார்ச் 04 22:22
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 05 11:07
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஜெனீவா மனித உரிமைச் சபை தகவல்களைப் பெறுவதற்காக விசாரணைக் குழுவொன்றை அமைத்திருந்தது. அந்தக் குழு இலங்கைக்கு வரவேயில்லை. அந்த குழுவுக்கு முன்பாக எவரும் சாட்சியங்கள் கொடுக்கவும் இல்லை. ஆகவே தகவல் சேகரிப்பு மாத்திரமே நடந்துள்ளது. சத்தியக் கடதாசிகள். நவீன தொழில் நுட்ப முறைகளினூடாகப் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கைகளைக் காண்பித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் சர்வதேச விசாரணை நடந்ததாகக் கூறுகிறாரென சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான காண்டீபன் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
 
13 ஆவது திருத்தச் சட்டத்திலே உள்ள அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்துங்கள் என்று 30.1 தீர்மானத்தின் 16 ஆவது பிரிவில் சர்வதேச நாடுகளின் நிவாரணமாக இலங்கைக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றிருக்கிறது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வரை இதன் உண்மைத் தன்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை

ஜெனீவா 30.1 தீர்மானத்தில் உள்ள விடயங்கள் மற்றும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய அரசியல் நிலைமைகள் தொடர்பாக காண்டீபன் செய்தியாளர் மாநாட்டில் கூறிய முழுமையான விபரங்கள் வருமாறு

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்துதான் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிரகடனம் செய்யப்பட்டடிருந்தது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்துபவர்கள் வரலாற்றை ஒரு கணம் மீட்டிப் பார்க்க வேண்டும். இன்று தமிழரசுக் கட்சி அதேகொள்கைகளைக் காட்டிக் கொடுக்கும் ஒரு கட்சியாக இருந்து கொண்டு காங்கிரஸ் மீது விரலை நீட்டுவதற்கான எந்தவொரு தார்மீக உரிமையும் இருக்க முடியாது.

76 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் வெளிவந்த பின்னர் நடந்த அரசியல் உங்களுக்குத் தெரியும். அதாவது ஆயுதப் போராட்டம் அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டபோது முப்பத்து மூன்று வருடங்கள் தேசியத் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஆயுதப் போராட்டம் மௌனிக்கிறது என்ற வார்த்தையை உச்சரித்திருந்தார். தமிழ்த்தேசிய அரசியல் போராட்டத்தை புலம்பெயர் உறவுகளிடமும் என்னுடை தமிழ் உறவுகளிடமும் கையளிப்பதாகவே அந்த வார்த்தையை அவர் உச்சரித்திருந்தார்.

அவருக்குத் தெரியும் நிச்சயமாக ஆயுதத்தினுடைய பலம் இல்லாதபோது தமிழ்த் தேசியத்தை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற இந்தத் தலைமை சோரம் போகக் கூடிய விலை போகக் கூடிய தலைமைதான். ஆகவே இந்தத் தலைமையை தான் அடையாளம் காண்பிக்க முடியாது என்றே கூறியிருந்தார்.

எனவே அதன் தொடர்ச்சியும் நீச்சியுமாக அதே அரசியலை முன்னெடுக்க முற்பட்ட இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலாக புலிகளினுடைய அந்தக் கொள்கைளையும் நேர்மையும் வரித்துக் கொண்டவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வந்த பிற்பாடுதான் முள்ளிவாய்க்கால் சம்மந்தமாக ஒரு சர்வதேச விசாரணை பற்றிய பேச்சை நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இலங்கையிலே நடந்தது இனப்படுகொலைதான். அதற்குச் சர்வதேச விசாரணை அவசியம். இதனை அப்பழுக்கற்ற முறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தி வருகின்றது. 2015 ஆம் ஆண்டு விக்னேஸ்வரன் மாகாண சபையிலே தமிழ் இனப்படுகொலை என்றவொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். அதற்கு சர்வதேச விசாரணை தேவை என்று மற்றொரு தீர்மானத்தையும் வடமாகாண சபையில் அவர் சமர்ப்பித்திருந்தார்.

மனித உரிமைச் சபை தகவல்களைப் பெறுவதற்காக விசாரணைக் குழுவொன்றை அமைத்திருந்தது. அந்தக் குழு இலங்கைக்கு வரவேயில்லை. அந்த குழுவுக்கு முன்பாக எவரும் சாட்சியங்கள் கொடுக்கவும் இல்லை. ஆகவே நடந்தது ஒரு தகவல் சேகரிப்பு மாத்திரமே. சத்தியக் கடதாசிகள். நவீன தொழில் நுட்ப முறைகளினூடாகப் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த அறிக்கைகள் சர்வதேச விசாரணைகள் அல்ல

அந்த வேளையிலேதான் பூகோள அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை மாற்ற வேண்டிய தேவை இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்தது. ஏனெனில் சீனா சார்ந்து மகிந்த ராஜபக்ச செயற்பட்டமையும் ஆசியப் பிராந்தியத்தைச் சாந்த அமெரிக்காவின் அந்தப் பூகோள அரசியலும் இந்தியாவின் சௌத் புளொக் என்கிற இராஜதந்திர அரசியல் முனைப்புகளையும் காட்டி மேற்கும் சீனாவுமாக இந்தச் சர்வதேசம் பிரிந்திருக்கும்போது அமெரிக்காவுக்கு இலங்கையைத் தன்வசப் படுத்த வேண்டிய தேவையின் நிமித்தமே மகிந்த ராஜபக்சவின் ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது.

முள்ளிவாய்க்காலிலே நடந்த விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குப் பாரப்படுத்தப்பட்ட போது, அப்போதிருந்த செயலாளர் நாயகம் பான் கீ மூன் 2009 ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி இலங்கைக்கு வந்து விமானத்தில் இருந்தாவறு முள்ளிவாய்க்கால் நிலைமைகளைப் பார்வையிட்டு அதன் தாற்பரியத்தை அறிந்து மகிந்த ராஜபக்சவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்கிறார்.

பொறுப்புக் கூறலை மேற்கொள்ள வேண்டும் என்ற வகையில் அந்த ஒப்பந்தத்தை பான்மூன் மகிந்தவுடன் செய்திருக்கிறார். பின்னர் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட தருஸ்மன் தலைமையிலான அமெரிக்கச் சட்ட வல்லுநர் ஸ்ரீபன் ரட்னர், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த யஸ்ரின் சூக்கா என்றகிற மூன்றுபேரைக் கொண்ட நிபுணர்குழு ஒன்றை பான்மூன் நியமித்திருந்தார்.

இந்த மூன்றுபேர் கொண்ட ஐ.நா நிபுணர்குழு முள்ளிவாய்க்கால் நிலைமை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையிலே இறுதிப் போரில் நடந்தேறிய குற்றங்கள் அனைத்தும் சர்வதேசக் குற்றங்களுக்கு ஒப்பானவை, நாற்பது ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டி அந்த அறிக்கை செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை பான் கீ முன் வெளியிட்டிருந்தார். மகிந்த ராஜபக்சவும் பான் கீ மூனும் கைச்சாத்திட்ட அந்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த இந்த நிபுணர் குழுவின் அறிக்கை, இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்துகின்றது. அந்தப் பொறுப்புக் கூறலை வலியுத்தும் நோக்கிலேயே இந்த நிபுணர்குழு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிபுணர்குழு, சற்றலைற்றில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் விடயங்களை அவதானித்து முள்ளிவாய்காலில் நடந்தது சர்வதேசக் குற்றங்கள் தான் என்ற தங்கள் அவதானிப்பைச் செய்திருந்தது. அத்துடன் அப்போது தூதுவராக இருந்த பாலித கோணன்ன, வெளியுறவு அமைச்சராக இருந்த போராசிரியர் பீரிஸ் ஆகியேர் வெளியிட்ட மறுப்புகளும் இந்த நிபுணர்குழு அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையிடம் தோற்றுவிட்டது என சர்வதேச அமைப்புகள் மனித உரிமை நிறுவனங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன. இதனால் பான் கீ மூன் மீண்டுமொரு நிபுணர் குழுவை நியமிக்கிறார். அந்த அறிக்கை 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

தருஸ்மன் தலைமையிலான ஐநா அறிக்கை மார்ச் மாம் 31 ஆம் திகதி 2011 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாள்ஸ் பெற்றி என்ற நிபுணர் ஒருவரை அழைத்து அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்கிறது. இதற்கு மேலதிகமாகச் சுமந்திரன் சர்வதேச விசாரணை பற்றிக் கூறுகிறார். அவர் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட இந்த உத்தியோகபுர்வ நிபுணர்குழு அறிக்கைகளையே சர்வதேச விசாரணையாகக் காண்பிக்கிறார். இந்த நிபுணர்குழு அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோபூர்வ இணையத்தளங்களில் பார்க்க முடியும்.

சிரியா, பலஸ்தீனம், ஆகிய நாடுகளின் பிரச்சினைகள் அங்கு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறன. ரோஹிந்திய மக்கள் இடம்பெயர்ந்து பங்களாதேஸ் நாட்டுக்குச் சென்றமையினால் பங்களாதேஸ் அந்த மக்களின் பிரச்சினையை சர்வதேசக் குற்ற்வியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தியுள்ளது. எனவே வீற்றோ அதிகாரம் இருந்தால் மாத்திரமே சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்லாம் என்ற காலம் எல்லாம் தற்போது செயலற்றுப் போய்விட்டது

இலங்கையுடைய பொறுக் கூறல் தவறிய நிலைமையிலேதான் இந்த நிபுணர்குழு அறிக்கைகள் வெளிவந்தன. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் அல் ஹூசைன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்துமே கொரூரமான குற்றங்கள் இலங்கையில் நடந்துள்ளதை வெளிக்காட்டுவதாக அல ஹூசைன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் பின்னர் 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமைச் சபையில் உரையாற்றுகிறார். இங்கேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கு ஏன் ஆதரவு வழங்கியது என்ற உண்மை வெளிவருகின்றது.

அது மாத்திரமல்ல 30.1 தீர்மானத்தில் இருந்து இலங்கையின் புதிய அரசாங்கம் விலகவுள்ளதாக அறிவித்ததும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற விவாதம் ஒன்றுக்குக் கோரியிருந்தது. அப்போது உரையாற்றிய முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச விசாரணையைத் தவிர்ப்பதற்காகவே 30.1 தீர்மானத்துக்கு அன்று இணை அனுசரணை வழங்கியதாகத் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்க முற்பட்டதுக்கு இந்தச் செயற்பாடுகளே காரணம். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல். இதுதான் மைத்திரி- ரணில் அரசாங்கத்துடன் கூட்ட்மைப்புக்கு இருந்த உடன்பாடு. சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே 30.1 தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கி ஜெனீவாவுக்குள் நுழைந்தோம் என்பதை மங்கள சமரவீர இலங்கை நாடாளுமன்ற விவாதத்தில் கூறுகிறார்.

அல் ஹூசைனின் அறிக்கையில் உள்ள விடயங்களை நோக்கினால், இலங்கையில் பாதுகாப்புச் செயலாளர், இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் போன்ற உயர்மட்ட அதிகாரங்கள் உள்ளவர்களினாலேயே இந்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அரச பலம், அரசியல் அதிகாரங்கள் அதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்தக் குற்றங்களை நீதிமன்றம் ஒன்றில் விசாரணை நடத்தினால் அவை சர்வதேசக் குற்றங்களாகவே கருதப்படும் என்றும் அல் ஹூசைன் தனது அறிக்iயில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே இந்தக் குற்றம் இழைத்தவர்கள் அதற்கு வகை சொல்ல வேண்டியவர்களாகவும் பொறுப் கூற வேண்டியவர்களாக இருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் அவர் கூறுகிறார்.

இந்த இடத்தில் மனித உரிமைச் சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை நியமித்த மாற்றி ஆற்றீஸ் என்ற நிபுணர் தயாரித்திருந்த அறிக்கையும் இந்தக் குற்றங்கள் மனித உரிமை மீறல்களாகக் கொள்ளப்படுகின்றன. ஆனால் மாற்றி ஆற்றீஸினுடைய அறிக்கையில் வெறுமனே மனித உரிமை மீறல் குற்றங்களாகவே கூறப்பட்டுள்ளன. (அறிக்கையின் உள்ளடக்கம் மிகவும் முக்கியமானது) ஆனால் அது குற்றவியல் விசாரணையாக இல்லை. எனவே இந்த அறிக்கைகளைக் காண்பித்தே சுமந்திரன் சர்வதேச விசாரணை முடிவடைந்துள்ளதாக கூறுகிறார்.

குற்றம் இழைத்த ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்படுவது வழமை. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினால் நீதிமன்றமே அவரை விசாரணை செய்யும். எனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் வேலையைத்தான் ஜெனீவா மனித உரிமைச் சபை செய்திருக்கிறது

போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல் குற்றங்கள் அல்லது மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை என்று வரும் போது ஐக்கிய நாடுகள் சபை மூன்று வகையான விடயங்களைக் கூறுகிறது. ஓன்று விசாரணை ஆணைக்குழு (Commissions of Inquiry) இரண்டாவது உண்மையைக் கண்டறியும் குழு (Fax finding missions) மூன்றாவது புலன் விசாரணை (Investigation) இந்த மூன்று விடயங்களுடன் மேலதிகமாகச் சிறப்புத் தத்துவங்களையும் உருவாக்கி விசாரணைகளை நடத்த முடியும்.

இந்த அறிக்கை தமிழ் மொழியிலும் உண்டு. ஆனால் சுமந்திரன் தமிழில் உள்ள அறிக்கையைக் காண்பிக்காது ஆங்கிலத்தில் இருப்பதை மட்டுமே காண்பித்திருக்கிறார். தலைப்பை மாத்திரமே அவர் கூறுகிறார். புலன் விசாரணை என்றே இந்த அறிக்கையின் உத்தியோகபூர்வ தமிழ் மொழி பெயர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் இழைத்த ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்படுவது வழமை. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினால் நீதிமன்றமே அவரை விசாரணை செய்யும். எனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் வேலையைத்தான் ஜெனீவா மனித உரிமைச் சபை செய்திருக்கிறது. மனித உரிமைச் சபை, மனித உரிமைகள் தொடர்பான தத்துவத்தைக் கொண்டிருக்கிறது. மனிதாபிமானச் சட்டம். சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள அதிகாரங்களை தத்துவங்களை அதன் விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக அதுபற்றிய தகவல்களைச் சேகரிக்கும் ஒரு அமைப்பே மனித உரிமைச் சபை.

அந்த மனித உரிமைச் சபை தகவல்களைப் பெறுவதங்காக விசாரணைக் குழுவொன்றை அமைத்திருந்தது. அந்தக் குழு இலங்கைக்கு வரவேயில்லை. அந்த குழுவுக்கு முன்பாக எவரும் சாட்சியங்கள் கொடுக்கவும் இல்லை. ஆகவே நடந்தது ஒரு தகவல் சேகரிப்பு மாத்திரமே. சத்தியக் கடதாசிகள். நவீன தொழில் நுட்ப முறைகளினூடாகப் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

எனவே இவற்றைத்தான் சுமந்திரன் சர்வதேச விசாரணையாகக் காண்பிக்கிறார். மனித உரிமைச் சபையின் 30.1 தீர்மானத்துக்கு மேலும் மேலும் கால நீடிப்பு வழங்குவதற்கான ஒத்துழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்தமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் மக்கள் முன்னணி அன்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. ஆனால் அந்தக் கால நீடிப்பபை சர்வதேச மேற்பார்வைக்கான நீடிப்பே தவிர கால நீடிப்பு அல்ல என்று தற்போது சுமந்திரன் கூறுகிறார்.

ஆனால் காலம் மாத்திரமே நீடிக்கப்பட்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரையும், பின்னர் 2017 ஆம் ஆண்டில் இருந்து 18 மாதங்கள் அதற்குப் பின்னர் 2021 வரை கால நீப்புச் செய்யப்பட்டிருக்கிறது. இதைச் சுமந்திரன் தற்போது தனது சட்ட வியாக்கியானத்தில் சர்வதேச மேற்பார்வைக்கான நீடிப்பாகக் கூறலாம். ஆனால் இது கால நிடிப்புத்தான். இவ்வாறு கால நீடிப்பு கொடுகப்பட்ட 30.1 தீர்மானத்திலே சில விளங்கங்களை சுமந்திரன் கொடுக்க முற்படுகிறார்.

மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்க முற்பட்டதுக்கு இந்தச் செயற்பாடுகளே காரணம். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல். இதுதான் மைத்திரி- ரணில் அரசாங்கத்துடன் கூட்ட்மைப்புக்கு இருந்த உடன்பாடு. சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே 30.1 தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கி ஜெனீவாவுக்குள் நுழைந்தோம் என்பதை மங்கள சமரவீர இலங்கை நாடாளுமன்ற விவாதத்தில் ஒப்புக்கொள்கிறார்.

ஆனால் தீர்மானம் முழுமையாக என்ன சொல்லுகின்றது என்ற விடயத்துக்குள் அவர் செல்லவில்லை. சர்வதேச ஆலோசணைகளைப் பொற்று இலங்கையில் விசாரணை நடத்துவதற்கான ஒரு பொறிமுறையைத் தான் கலப்பு நீதிமன்றம் என்று கூறி இந்தத் தீர்மானத்திலே கொண்டு வந்திருக்கிறார்கள். இதுதான் சர்வதேச வலைப்பின்னல். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை மீது அக்கறை இருந்தது என்று சொன்னால், தீர்மானத்தின் 16 ஆவது பிரிவைப் பார்க்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது.

ஏனெனில் இதிலேதான் இணை அனுசரனை வழங்க இலங்கையும் தயாராக இருந்தது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கேட்டுக் கொண்டு இந்தக் கால நீடிப்பை ஏன் வழங்க வேண்டும்? பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதால் இந்தக் கால நீடிப்புக்கு ஒத்துழைப்புக் கோரப்பட்டிருக்கிறது.

2021 ஆம் ஆண்டு வரை இந்தத் தீர்மானத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருபதற்குப் பின்னால் இருக்கிற வலைப்பின்னல் இதுதான். அதாவது இலங்கை கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிற 16 ஆவது பிரிவில் இலங்கை மக்களுக்காகச் சொல்லப்பட்டிருக்கிற தீர்வு முக்கியமானது. அதாவது அரசாங்கம் அரசியல் தீர்வு வழங்குவதற்கக் ஒப்புக்கொண்ட விடயங்களை ஏற்றுக் கொள்கிறோம். அதனை உற்சாகப்படுத்துகின்றோம். இலங்கையின் அரசியல் யாப்புக்கு அமைவாக உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமூல்படுத்த வேண்டும் என்பது 30.1 தீர்மானத்தில் 16 ஆவது பிரிவில் இருக்கின்ற முக்கிய விடயமாகும்.

எனவே இலங்கை மக்களுக்கான தீர்வாக ஏக்கிய இராஜ்ஜிய என்று சிங்களத்தில் சொல்லப்படுகின்ற அதேவேளை, சமஸ்டி என தமிழில் அர்த்தப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒற்றை ஆட்சிக்கு அமைவான தீர்வைத்தான் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் இலங்கை அரசாங்கம் இணைத்திருக்கிறது. இதைத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தமிழர்களுக்கான தீர்வு என்றும் கூற முற்பட்டார்கள்.

எனவே 30.1 தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. தீர்மானத்தின் 16 ஆவது பிரிவில் அது பற்றி மிகவும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. 13 ஆவது திருத்தச் சட்டத்திலே உள்ள அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்துங்கள் என்று சர்வதேச நாடுகளின் நிவாரணமாக இலங்கைக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றிருக்கிறது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வரை இதன் உண்மைத் தன்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை.

அதற்குக் காரணம் உண்டு. ஏனெனில் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஏக்கிய இராஜ்ஜிய அதாவது ஒற்றை ஆட்சி என்றுதான் இருக்கிறது. ஒற்றையாட்சிக்குக் கீழேதான் இந்தப் 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளது. ஆனால் தமிழ் மக்களுக்குச் சொல்லும் போது இல்லை அது சமஸ்டி என்றும் சிங்களத்திலதான் ஏக்கிய இராஜ்ஜிய என்று கூறப்பட்டிருப்பதாகவும் சுமந்திரன் விளக்கமளிக்கிறார்.

ஆனால் இது ஒற்றை ஆட்சிமுறை. எனவே நிராகரிக்க வேண்டுமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமல்ல, யாழ் பல்கலைக்கழகக் கல்விச் சமூகமும், சிவில் சமூக அமைப்புகளும் பொது அமைப்புகளும் கூறியிருக்கின்றன. ஆகவே இந்த அரசியல் வலைப்பின்னலில் உள்ள சூட்சுமங்களை நாங்கள் வெளியே சொல்லாது விட்டால், இந்த அரசியல் தெளிவை மக்களுக்கு வழங்காது போனால் தந்தை செல்வா சொன்னதுபோன்று தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. இனிமேல் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவதற்கான இடமேயிருக்காது.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கொழும்பில் கடந்த ஆண்டு ஓக்ரோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியின்போது, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்காக சட்டத்தரணி கனகஈஸ்வரன் நீதிமன்றத்தில் வாதாடினார். ஆனால் அந்த வழங்கை தானே செய்ததாக சுமந்திரன் உரிமை கோருகின்றார். சரி அவ்வாறு சுமந்திரன்தான் அந்த ஜனநாயகத்துக்கான வழக்கைச் செய்ததாக எடுத்துக் கொண்டாலும் அது இரண்டு பிரதான சிங்கள பௌத்த தேசிவாதக் கட்சிகளுக்கிடையே நடத்த அரசியல் போராட்டம்.

அது சிங்களக் கட்சிகளுடைய பிரச்சினையாக இருந்ததால் நீதிமன்றம் சரியான முறையில் தீர்ப்பை வழங்கியிருந்தது. ஆனால் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்தபோது அதனைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டுமென ஜே.வி.பி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. இணைந்திருக்க வேண்டும் எனச் சுமந்திரன் நீpதிமன்றத்தில் வாதாடினார். ஆனால் இரண்டு மாகாணங்களும் தனித்தனியாகப் பிரிந்திருக்க வேண்டுமென்றே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்து.

அதேபோன்று நுவரெலியாவில் உள்ள காணி ஒன்றுக்கு உரிமை கோரிய நபர் ஒருவர் அந்தக் காணி மத்திய மாகாண சபைக்குள் வருவதால் மாகாணத்துக்கே காணி அதிகாரம் இருப்பதாகக் கூறி வழங்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த காணி உரிமையாளரின் சார்பில் சுமந்திரன் வாதடியிருந்தார். மாகாணங்களுக்கே காணி உரிமை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் ஒற்றையாட்சி அரசியலமைப்பில் மாகாணங்களுக்குக் காணி உரிமை இல்லை என்றே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஆகவே நீதிமன்றம் இவ்வாறு வழங்கிய தீர்ப்புகள் ஒரு இனத்துக்கு எதிரானவை என்று கூறி சுமந்திரன் இந்த விவகாரங்களை சர்வதேசத்திடம் பாரப்படுத்தியிருக்க வேண்டுமே? ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு நீதிமன்றத்தில் வாதாடி 52 நாட்களில் ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொடுத்ததாக மார்தட்ட முடியாது. ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகத்துக்காக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழ் மக்களுக்கானதல்ல. அது சிங்கள மக்களுக்கன தீர்ப்பு@@

தமிழ் மக்களுக்கான தீர்ப்பு இனப்படுகொலை என்று மட்டும் எழுதப்பட்டது. இந்த இனப் படுகொலை விவகாரத்தைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அன்று கூறியபோது. அவ்வாறு சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு போக முடியாதென்று அடித்துக் கூறியிருந்தார் சுமந்திரன்.

சர்வதேச சட்ட ஏற்பாடுகளை மழுங்கடிக்கும் வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம். இந்தப் போராட்டத்தில் பெருமளவு உயிர்த் தியாகங்கள் நடத்திருக்கிறன. அந்த உயிர்த் தியாங்கள் மீது எழுதப்பட்ட அரசியல்தான் தமிழ் இன அழிப்பு அரசியல். ஆகவே இனப்படுகொலை என்ற அரசியலை முன் நகர்த்தி தமிழர்களுக்கான தீர்வைப் பெறுகின்ற சர்வதேச அரசியலைக் கையாளுகின்ற பக்குவத்தில் நாங்கள் செயற்பட வேண்டும்

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கு முன்பாகப் பேசியிருந்த கஜேந்திரகுமார் பொன்னம், இலங்கை நான்கு ஆண்டுகள் தோல்வி கண்டு விட்டது. ஏனவே சர்வதேசக் குற்ற்வியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கோரியிருந்தார். இதனால் அவசர அவசரமாக இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த சுமந்திரன் சர்வதேசக் குற்ற்வியல் நீதிமன்றத்துக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டதாகக் கூறினார்.

முன்னர் சர்வதேச நீதிமன்றத்துக்குப் போக முடியாது என்று கூறிய சுமந்திரன், தற்போது சர்வதேச நீதிமன்றத்துக்குப் போற வழியை எவ்வாறு தேடுகிறார். இந்த விடயங்களை அவர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இப்படி நாடாளுமன்றத்திலே வீர ஆவேசமாகப் பேசி மக்களை ஒவ்வொரு நாளும் ஏமாற்ற முடியாது. சர்வதேச நீதிமன்றத்தில், சர்வதேசக் குற்ற்வியல் நீதிமன்றத்தில் இன்று பல்வேறு நாடுகள் முறையிடுகின்றன.

சிரியா, பலஸ்தீனம், ஆகிய நாடுகளின் பிரச்சினைகள் அங்கு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறன. ரோஹிந்திய மக்கள் இடம்பெயர்ந்து பங்களாதேஸ் நாட்டுக்குச் சென்றமையினால் பங்களாதேஸ் அந்த மக்களின் பிரச்சினையை சர்வதேசக் குற்ற்வியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தியுள்ளது. எனவே வீற்றோ அதிகாரம் இருந்தால் மாத்திரமே சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்லாம் என்ற காலம் எல்லாம் தற்போதை நிலையில் செயலற்றுப் போய்விட்டது.

ஏனெனில் மனித உரிமை மீறல், இனப்படுகொலைகள் நடத்த நாட்டில் இன்னுமொரு நாடு வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தினால் என்ன நடக்கும்? ஆகவே அதைப் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் இருக்கின்ற பிரதம வழக்குத் தொடுநருக்கு ரோம் சாசனத்தின் பிரகாரம் முழுத் தத்துவங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

அதாவது நாடு ஒன்றில் மனித உரிமை மீறல், இனப்படுகொலை நடத்தாக பிரதம வழக்குத் தொடுநர், அறிக்கைகள், பரிந்துரைகள் மூலமாக அவர் திருப்பதிப்படுகிறபோது, அவராகவே முன் வந்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் தத்துவங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிரியா தொடர்பாக ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருக்கின்ற தனிப்பட்ட சட்ட வல்லுநர்கள் ஆலேசனைகளைப் பெற்று சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தியுள்ளனர்.

பலஸ்தீனம் தொடர்பான விடயத்தை இந்த வழக்குத் தொடுநகராக இருக்கின்ற ஷம்பியா நாட்டின் முன்னாள் பெண் நீதியரசர் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்திருக்கிறார். இவ்வாறு பல ஏற்பாடுகள் சர்வதேச சட்டங்களுக்குள்ளே இருக்கின்றன. இதனால்தான் என்னவோ சுமந்திரன் இந்தத் தரகு அரசியலைச் செய்து தமிழர்களின் இந்த அரசியலை ஒற்றையாட்சி அரசுக்குள் முடக்கித் தமிழ்த் தேச அடையாளங்களை இல்லாம் செய்கின்ற அரசியல் கைங்கரியங்களை செய்கின்றார் என்றவொரு நியாயமான சந்தேகம் உண்டு.

எனவே சர்வதேசச் சட்டங்கள் தெரிந்தவர், ஜெனீவாவுக்குப் போய் பேசுகின்றவர் என்ற அடிப்படையிலே நேர்மை நியாயமாக இந்த அரசியலைப் பேசுவதற்கான திறந்த விவாதத்துக்கு சுமந்திரன் வரவேண்டும். ஏனெனில் சர்வதேச சட்டவிதிகளின் பிரகாரம் இனப்படுகொலை நடத்திருந்தாக நிரூபிக்கப்பட்டால், சேர்ந்திருங்கள் என்று எந்தவொரு நாடும் பாதிக்கப்பட்ட மக்களைக் கேட்காது.

இனப்படுகொலை நீரூபிக்கப்பட்டால் தனித்த நாட்டைக் கொடுப்பதுதான் சர்வதேச நெறிமுறை. எனவே இன அழிப்புக் கோரிக்கையைத் தமிழர்கள் முன்வைத்தால் சுயாட்சி அதிகாரத்தை, ஒரு நாடு இரு தேசம் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வடக்குக் கிழக்குத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகவே இந்த அரசியலைதான் முன்கொண்டு செல்ல வேண்டும்.

சர்வதேசச் சட்ட ஏற்பாடுகளை மழுங்கடிக்கும் வகையில் உங்கள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம். இந்தப் போராட்டத்தில் பெருமளவு உயிர்த் தியாகங்கள் நடத்திருக்கிறன. அந்த உயிர்த் தியாங்கள் மீது எழுதப்பட்ட அரசியல்தான் தமிழ் இன அழிப்பு அரசியல். ஆகவே இனப்படுகொலை என்ற அரசியலை முன் நகர்த்தி தமிழர்களுக்கான தீர்வைப் பெறுகின்ற சர்வதேச அரசியலைக் கையாளுகின்ற பக்குவத்தில் நாங்கள் செயற்பட வேண்டும்.

இந்தியாவோ அமெரிக்காவோ தமிழர் தரப்பை கையாள்வதற்கு அப்பாலே தமிழ்த்தேசிய அரசியல், இந்தியாவைக் கையாள்வதா அல்லது அமெரிக்காவைக் கையாள்வதா என்ற பூகோள அரசியல் நிலைமைக்கு ஏற்ப தமிழர்கள் தங்கள் தேச அரசியலை நகர்த்த வேண்டும் என்று சட்டத்தரணி காண்டீபன் நீண்ட விளக்கமளித்தார்.