வடமாகாணம்

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக மேலதிக விசாரணை நடத்த எழுத்து மூல சமர்ப்பணம்

தொடர்ந்து விவாதிப்பதா இல்லையா என்பது குறித்து 10 ஆம் திகதி நீதிமன்றம் அறிவிக்கும்
பதிப்பு: 2020 மார்ச் 05 22:31
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 05 22:47
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடமாகாணம் மன்னார் நகர நுழை வாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதோச விற்பனை நிலையக் கட்டடத்திற்கு அருகில் இருந்த போர்க்காலத்துக்குரியது என சந்தேகிக்கப்படும் மனிதப் புதை குழி தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து மன்னார் சதோச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை காணாமல ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஊடாகவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவாதிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்ற மாதம் 25ஆம் திகதி மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த வழக்கு தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணத்தை இம்மாதம் ஐந்தாம் ஆம் திகதிக்கு முன்னர் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் முன்வைக்க வேண்டுமென நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்Nது இன்று குறித்த எழுத்து மூல சமர்பணம் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சமர்ப்பணத்தின் பின்னர் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகள் தொடர்ந்து வாதிட முடியுமா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் பத்தாம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

மன்னார் போர்க்காலத்துக்குரியவை என்று சந்தேகிக்கப்படும் மன்னார் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் மனித எச்சங்கள், மேலதிக ஆய்வுகாக அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு கடந்த ஆண்டு அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் அவை அனைத்தும் மன்னர் காலத்துக்குரியவை என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. எனினும் அந்த ஆய்வு அறிக்கையை மனிதப் புதை குழி அகழ்வில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவ்வாறே காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கமும் அந்த ஆய்வு அறிக்கையில் சந்தேகம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் மீன்டும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எழுத்து மூல சமர்ப்பணம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்த நேர்மையான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடத்தவில்லை என்றும் போர்க்காலக் குற்றங்களை மூடி மறைக்கும் செயல் என்றும் உறவினர்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.