இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக் கட்சிகள் தீவிரம்

வாக்குகளைச் சிதறடிக்கப் பல சுயேற்சைக் குழுக்களைக் களமிறக்கக் கொழும்பு முயற்சி
பதிப்பு: 2020 மார்ச் 06 17:01
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 06 17:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தமிழ்க் கட்சிகள் வேட்புனுக்களைத் தாக்கல் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தும், அந்தத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதில் ஒவ்வொரு தமிழ்க் கட்சிகளும் தீவிரம்காட்டி வருவதாக சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார். தேர்தல் காலம் என்பதால் நம்பகத்தன்மையற்ற வாக்குறுதிகள் அள்ளிவீசப்படுவதாகவும் வடக்குக்- கிழக்கு இணைந்த தாயகம் தன்னாட்சி என்ற பேச்சுக்களை விட தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றக் கதிரைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
 
ஏதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வேட்புமளுனுத் தாக்கல் செய்யப்படவுள்ளதால் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் கிளிநொச்சித் தொகுதியை உள்ளடக்கிய யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏழு ஆசனங்களும் மன்னார் முல்லைத்தீவு, வவுனியா ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களும் உள்ளன.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் ஐந்து ஆசனங்களும் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் நான்கு ஆசனங்களும் அம்பாறைத் தேர்தல் மாவட்டத்தில் ஏழு ஆசனங்களும் உண்டு.

தேசியப்பட்டியல் உள்ளிட்ட மொத்தமாக 29 ஆசனங்கள் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் உண்டு. கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத் தேர்தல் தொகுதியில் கூடுதலாக முஸ்லிம் வாக்களர்களோ அதிகமாக வாழ்கின்றனர்.

ஈழத் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் கொழும்பை மையமாகக் கொண்ட சில அரசியல் செயற்பாட்டாளர்கள் சுயேற்சைக்கு குழுக்கள் பலவற்றைக் களமிறக்குவதாகவும் சில தமிழக் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதேவேளை, கொழும்பில் பிரதான சிங்கள்க கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதால் கோட்டாபய ராஜபக்ச. மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி தலைமையிலான அரசியல் அணிக்கு ஆட்ச்pயமைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமெனக் கொழும்பு அரசியல் வட்டரங்கள் கூறுகின்றன.

அதேவேளை, தேர்தலில் போட்டியிடுவதற்hக ஒன்பது சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.