இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தலில் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குமார் குழு போட்டி

இலங்கைத் தேசிய கொடியே கட்சியின் சின்னமாம்
பதிப்பு: 2020 மார்ச் 16 21:55
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 18 21:47
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#bbs
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேன போட்டியிடவுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட பௌத்த குருமார் குழு ஒன்று ஞானசார தேரருடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளது. எங்கள் மக்கள் சக்தி (Ape Jana Bala Pakshaya) என்ற புதிய அரசியல் கட்சியின் மூலம் இவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். கட்சியின் சின்னமாக இலங்கை தேசியக்கொடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசியக் கொடியை கட்சியின் சின்னமாகப் பயன்படுத்த முடியாதென்று இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
 
முன்னாள் அமைச்சர் நடிகர் ஜீவன் குமாரதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அரசியல்வாதிகள் பலர் இவர்களுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கலகொட அத்தே ஞானசாரதேரர் குருநாகலிலும் அதுரலிய ரத்ன தேரர் கம்பகா மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர். தமக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் என அதுரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.

முஸ்லிம் மக்களின் அடிப்படைவாதச் செயற்பாடுகளைக் கண்டிப்பதாகவும் எதிர்ப்பதாகவும் கூறிய அத்துரலியே ரத்தன தேரர் இது குறித்து தேர்தல் பிரச்சாரங்களில் சிங்கள பௌத்த மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போரை தீவிரமாக நடத்தவும் இலங்கை இராணுவப் புலனாய்வுடன் சேர்ந்தும் செயற்பட்டவரே இந்த ஞானசார தேரர். நேர்வேயின் ஏற்பாட்டுள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைவதற்கு அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட மாகாநாயக்கத் தேர்தகள் காரணமாக இருந்தனர் என்பது வெளிப்படை.

இவ்வாறான நிலையில் பௌத்த பிக்குமாரை உள்ளிடக்கிய இந்தக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.