வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில்

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தமிழ் இளையோரின் விழிப்புணர்வு நடவடிக்கைகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை நிலையம்
பதிப்பு: 2020 மார்ச் 19 21:44
புதுப்பிப்பு: மார்ச் 20 22:13
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தாயகப் பிரதேசமான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பிரித்தானியாவில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த 61 வயதான நபர் ஒருவருக்குக் கொரேனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், விசேட சிகிச்சை நிலையம் ஒன்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு விசேட சிகிச்சை நியைலம் எனப் பெயரிடப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில அமைக்கப்பட்டுள்ளது.
 
குறித்த வைத்தியசாலையில் இயங்கி வரும் கொரோனா வைரஸ் தடுப்புத் தொடர்பான செயலணியே இந்த விசேட சிகிச்சை நியைலத்தை அமைத்துள்ளது. மக்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியாக தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாத மக்கள் கூட இந்த சிகிச்சை நியைலத்தில் வைத்திய அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளுக்கு இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து வருகை தந்துள்ளனர்.

இதனால் விசேட செயலணிகளை அமைக்க வேண்டுமென யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் கூறியிருந்தனர். அதனடிப்படையில் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுத்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வுத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வடமாகாணத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வுச் செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்காக இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தல் நிலையம், கொடிகாமத்தில் உள்ள் 522ஆவது படை முகாமில் அமைக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தொிவித்துள்ளார்.