வடக்குக்- கிழக்கில் உள்ள இலங்கை

விமானப்படைத் தளங்களில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் நிலையங்கள்

தாயகப் பிரதேசங்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு
பதிப்பு: 2020 மார்ச் 20 23:40
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 21 22:59
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இல்ங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் மக்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களை அமைத்து வருகின்றது. ஏலவே மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் பிரதேசங்களில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் கொரோனா வரைஸ் தனிமை்ப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள இலங்கை விமானப்படையினரின் முகாமிலேயே கொரோனா தடு்ப்புத் தனிமைப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வருகை தந்த 41 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
வடபகுதியில் உள்ள இலங்கை விமானப்படையின் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக இலங்கை விமானப்படை கூறியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவில் இருந்து வருகை தந்த 210 பேரைத் தனிமைப்படுத்தும் ஏற்பாடுகளில் இலங்கை விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தும் நிலையத்தில் 29 பெண்கள், 12 ஆண்கள் என 21 பேர் கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணம் கிளிநொச்சியில் உள்ள இரணைமடு விமான நிலையம், முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் போன்ற இடங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் இலங்கை விமானப்படையினரால் துரிதமாக அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். தென்பகுதியில் எந்தவொரு தனமைப்படுத்தல் நிலையங்களும் அமைக்கப்படவில்லை என்றும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் மாத்திரமே இந்த நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.