கொரோனா வைரஸ்

கொழும்பு அதி உச்ச அபாய வலையம்- தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்

102 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
பதிப்பு: 2020 மார்ச் 24 21:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 24 22:12
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்லும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகைளயில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் நடை;பெற்றது. அவசர நிலைமைகள் குறித்து ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மகிந்த ராஜபக்ச நேற்றுத் திங்கட்கிழமை அழைப்பு விடுத்திருந்தார். சென்ற வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று; காலை ஆறு மணிக்குத் தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை ஆறுமணி வரை அமூல்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இன்று கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் அமூல்படுத்தப்பட்டமையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது மற்றும் அத்தியாவசிய சேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் திருப்பதிகரமாக இல்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை, கொழும்பு, கம்பஙா. களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளட்கிய மேல் மாகாணம் அதி உச்ச அபாயப் பிரதேசமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படமாட்டாதென்றும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமூலில் இருக்கும் என்றும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக கொழும்பு மாவட்டமே அதி உச்ச அபாய வலையமாக இருக்குமென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் 222 பேருக்குத் தொற்றியுள்ளதாகச் சந்தேகிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 102 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை அதேவேளை யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 79 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் சுகாதா அமைச்சு அதிகாரபூர்வமாகத் தகவல்களை வெளியிடும் என்று சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியாராட்சி கூறியுள்ளார்.