இலங்கைத் தீவில்

கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு- வடமாகாணத்தில் 346 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

ஆறாம் திகதியின் பின்னரே உறுதியாகக் கூற முடியும்- சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிப்பாளர் கேதீஸ்வரன்
பதிப்பு: 2020 மார்ச் 31 22:17
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 02 23:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று செவ்யாக்கிழமை மேலும் அதிகரித்துள்ளது. இன்று இரவு 7.30 வரை 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று 122 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 142 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தாவர்களினாலேயே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்வதாக இலங்கைச் சுகாதா அமைச்சு கூறியுள்ளது. சென்ற 15 ஆம் திகதியின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் தம்மைப் பதிவு செய்ய வேண்டுமெனக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளை முதலாம் திகதியோடு முடிவடைகின்றது.
 
அதன் பின்னரும் பதிவு செய்யாதவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விபரங்கள் பெறப்பட்டுள்ளதென்றும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. இன்று அது குறித்த அறிவித்தல் ஒலிபெருக்கிகள் மூலம் விடுக்கப்பட்டது.

கொரோனா தொற்று அதிகரிப்பதனால் கொழும்புத் தேசிய வைத்தியசாலையிலும் களுபோவில போதான வைத்தியசாலையிலும் விசேட சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இலங்கைத் தீவில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் மறு அநிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கம்பஹா. களுத்துறை. மற்றும் யாழ்ப்பாபணம் ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை காலை ஆறு முதல் பிற்பகல் இரண்டு மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கொரோனோ வைரஸ் தொற்றுச் சந்தேகத்தில் தாயகப் பிரதேசமான வடமாகாணத்தில் 346 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் 14 நாள் கால அவகாசம் முடிவடைந்ததும் இவர்கள் எதிர்வரும் ஆறாம் திகதி விடுவிக்கப்படுவார்கள். ஆனால் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் தொடந்து சிகிச்சை இடம்பெறுமென வடமாகாண மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் அரியாலையில் சிவஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட சுமார் 319 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.