கொரோனா வைரஸ் தாக்கம்

இலங்கைக்கு இந்தியா மருந்துப் பொருட்களை அனுப்பியது

கோட்டாபய ராஜபக்ச நன்றி தெரிவிப்பு- மேலும் உதவிகள் வழங்கப்படும் என்கிறது தூதரகம்
பதிப்பு: 2020 ஏப். 07 22:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 08 23:43
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இலங்கையில் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டமைக்கு இந்திய மத்திய அரசுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளர். பத்துத் தொன் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், உபகரணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்திய மத்திய அரசு இதனை அனுப்பியுள்ளது. இவை இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசரகால சேவைக்கான மருத்துவ அன்பளிப்பு என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
 
தேவையான மருந்துப் பொருட்கள் மேலும் அனுப்பப்படும் என்றும் மருத்துவ உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்தியத் தூதரக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதா அமைச்சர் பவித்தரா வன்னியாராட்சி கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவருக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றியதைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து இலங்கையின் அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கியிருந்த நிலையில் சென்ற மாத இறுதியில் இலங்கைக்கு சீன அபிவிருத்தி வங்கி ஐநூறு மில்லியன் ரூபாய்களை நீண்டகாலக் கடனாக வழங்கியிருந்தது.

உலக வங்கி 128.6 மில்லியன் அமெரிக்க டெலர்களை உதவியாக வழங்க சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் வழங்;கியிருந்தது.