கொரோனா வைரஸ் தாக்கம

இலங்கையில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்- அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக அதிகரிப்பு
பதிப்பு: 2020 ஏப். 08 22:57
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 08 23:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கையில் இதுவரை ஏழுபேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். கொழும்பு ஐடிச் வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை மாலை ஒருவர் உயிரிழந்ததையடுத்தே உயிரிழப்பு ஏழாக அதிகரித்துள்ளது. 42 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில் 139 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். களுத்துறை, அக்கரைப்பற்று, கண்டி., கேகாலை பின்னவலை ஆகிய பிரதேசங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாதென்றும் எவரும் உள்ளே வரமுடியதெனவும் சுகாதாரணப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
 
அதேவேளை. எதிர்வரும் 14 நாட்களுக்கு வைரஸ் கடுமையாகப் பரவக் கூடிய காலம் என்றும் இதனால் மேலும் இரு வரங்கள் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராடசி தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் எதனையும் ஊடகங்களில் வெளியிட வேண்டாமென்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள், கிராமங்களுக்குள் வெளியில் இருந்து எவரும் செல்ல முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுளதென்றும் அவர் கூறினார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை. கன்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் நாளைக் காலை ஆறு மணிக்குத் தளர்த்தப்பட்டு பிற்பகல் நான்கு மணிக்கு மீண்டும் அமுல்லப்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொனோரா வைரஸ் தொற்றுத் தொடர்பான பாதகாப்பு ஏற்பாடுகளில் அரசியல் இருப்பதாக பிரதான கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆலோசனைகள் எதனையும் ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச செவிமடுக்கவில்லை என்றும் அரசாங்கம் தன்னிச்சினையாகச் செயற்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளின் மாநாட்டில் பயன் இல்லையென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.