கொரோனா வைரஸ் தாக்கம கட்டுப்பாட்டில்-

வடக்குக் கிழக்கில் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துமாறு கோரிக்கை

இலங்கையில் 24 மணி நேரத்தில் 14 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
பதிப்பு: 2020 ஏப். 13 23:16
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 13 23:34
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#coronavirus
இலங்கையில் கடந்தம 24 மணி நேரத்திற்குள் 14 பெருக்கு கொரோனா ரைவரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொற்று;ள்ளவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்வடைந்துள்ளது. மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களில் 14 பேருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் களுத்துறை மாவட்டம் பேருவளையில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக புனானையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தவர்கள். 219 பேர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். கொழும்பில் 45 பேருக்கும் களுத்துறையில் 44 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
 
இதேவேளை ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் துறையினர் வீட்டில் இருந்தவாறே பணிபுரிய வேண்டும் எனவும் அரசாங்கம் கேட்டுள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைத்தவிh மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் முற்று முழுதாக ஊரடங்குச் சட்டத்தை தளாத்த முடியுமென சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்த முடியுமென சுகாதார சேவைப் பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் ஆலோசனையுடன் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்ட அரசாங்க அதிபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.