கொரோனா வைரஸ்-

தனிமைப்படுத்தலுக்காகத் திருகோணமலைக்கு ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

ஒருவர் பலி- 29 பேர் காயம், மூவர் தப்பியோட்டம்
பதிப்பு: 2020 ஏப். 15 22:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 15 23:15
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
கொரோனா வைரஸ் தொற்றியதாகச் சந்தேகிக்கப்பட்டவர்களை திருகோணமலை சம்பூரில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்குக் கொழும்பில் இருந்து ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றிலேயே கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமெனச் சந்தேகிக்கப்பட்ட நபர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். கொழும்பு பிரதான வீதியில் உள்ள வரக்காபொல நகரில் இந்த விபத்து இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயங்கள் இன்றித் தப்பிய கொரோனா வைரஸ் தொற்றுச் சந்தேக நபர்கள் மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
 
இதனால் அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். அதில் ஒருவர் இரவு கைது செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். காயமடைந்த 29 பேரும் வரக்காபொல வைத்தியசாலையில் தனியான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் குறித்த பகுதிக்கு எவரும் செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுத் தனியான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வரக்காபொல நகரில் இருந்து கொழும்பு நோக்கி மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடனேயே குறித்த பேருந்து நேருக்கு நேராக மோதியுள்ளது. லொறியின் சாரதியே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றியதாகச் சந்தேகிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற இலங்கைக் கடற்படையின் பேருந்து விபத்துக்குள்ளானமை தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தின் சுகாதா அமைச்சர் பவித்திர வன்னியாராட்சி இலங்கைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற வரக்காபொல நகரின் பிரதான வீதியில் அவசரவ அவசரமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.