இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தல் யூன் 20- வர்த்தமானி வெளிவந்தது

முரண்பாடான கலந்துரையாடலின் பின்னர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்
பதிப்பு: 2020 ஏப். 20 13:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 21 13:53
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#slparliament
#election
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி நடைபெறுமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சித் தலைவர்களோடும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தேர்தலை மே மாதம் 28 ஆம் திகதி நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முற்படுகிறார் என்றும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் ஜனாதிபதி தலையிடுவதாகவும் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் குற்றம் சுமத்தியிருந்தார்.
 
அத்துடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிப்பது தொடர்பாக தனக்கே எதவும் தெரியாதென தனது முகநூலில் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யூன் மாதம் தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட முடிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்படலாம் எனவும் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்குமாறு கோரப்படவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கம் கொழும்பில் அதிகரித்துச் செல்லும் நிலையில் தேர்தலை யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த முடியாதென அறிவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

இதேவேளை, தேர்தலை மேலும் பிற்போடுவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாக சுயாதீன ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.