கொரோனா வரைஸ் தாக்கம்-

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் 11 ஆம் திகதி வரை முடக்கம் தொடரும்

தனிமைப்படுத்தல் நிலையங்கள் வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு
பதிப்பு: 2020 மே 01 22:50
புதுப்பிப்பு: மே 01 23:55
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது முடக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
 
ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை ஐந்து மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு பின்னர் ஆறாம் ஆம் திகதிவரை ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இந்த மாவட்டங்களில் அதன் பின்னர் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் 11 ஆம் திகதி காலை 5 மணிவரை வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவு முழுவதிலும் அமுலில் இருக்கும். ஆனாலும் முக்கியமான அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கை அரைவாசியாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் திறந்திருக்கும் என்றும் ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதேவேளை. கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை வரை மேலும் 690 ஆக அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே இந்த அதிகரிப்பு வருவதாகவும் புதிதாக எவருக்கும் வைரஸ் தொற்ற்வில்லையென்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். வடக்குக் கிழக்கு மாகாணத்தில் வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் வொண்டு வரப்பட்டுள்ளது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு வெளியேயுள்ள மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களே தங்கியுள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள அனேகமான பாடசாலைகள், கல்லூரிகள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமைக்கு மக்களும் சிவில் சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.