இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று

முல்லைத்தீவை அபாயகரமான பிரதேசமாக அறிவிக்கத் திட்டமா? சிவமோகன் கேள்வி

அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமெனவும் கோரியுள்ளார்
பதிப்பு: 2020 மே 02 23:42
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: மே 03 00:07
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
தாயகப் பிரதேசமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தி;ல் கொரோனா தொற்றுளதெனச் சந்தேகிக்கப்படுவவோரைத் தனிமைப்படுத்துவதங்காக அபாயவலயமாக்கும் செயற்பாட்டில், இலங்கை அரசாங்கம் ஈடுபடுவதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பு நிர்வாகத்துக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் சுகயீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனாலும் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக சிவமோகன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
 
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் எவரும் உள்ளே வரமுடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் இதுவரை தொற்றியில்லாத மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுவது நியாயமான செயற்படல்ல.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் தொற்றில்லாத மக்களுக்கும் தொற்றினை ஏற்படுத்தி அமைதியை குலைக்கும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.

எனவே இவ்விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் சந்தேகத்திற்கு இடமானவர்களை அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே தனிமைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தன் உண்மை நிலைமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் பகிரங்கமாகப் பதிலளிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.