வடக்குக் கிழக்குத் தாயக நிலைமைகள் தொடர்பாக

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தவிடம் அறிக்கை கையளிப்பு

மாலை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடல்
பதிப்பு: 2020 மே 04 22:25
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 04 22:33
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்ங்கை ஒற்றையாட்சி அரசின் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அறிக்கை ஒன்றை கையளித்துள்ளது. பிரதமரின் அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் கலந்துகொளளவில்லை. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டது.
 
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கையைப் படிப்படியாகக் கொண்டு வருவது தொடர்பாகவும் உரையாடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அதேவேளை, சந்திப்பு முடிவடைந்த பின்னர் இன்று மாலை மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் சந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுது;தினர்; கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளம் பிரதேசத்தில் 300 ஏக்கர் காணியும், ஜெயந்திபுரம் பிரதேசத்தில் 200 ஏக்கர் நிலமும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பாகக் கவனம் எடுப்பதாக மகிந்த ராஜபக்ச உத்தரவாதமளித்தாரென்று கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.