இலங்கைத் தலைநகர்

கொழும்பில் கொரோனா வைரஸ் திடீரென அதிகரிப்பு

11 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படக் கூடிய நிலை இல்லையெனத் தகவல்
பதிப்பு: 2020 மே 05 22:51
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 05 22:58
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
எதிர்வரும் 11 ஆம் திகதி திகதி முதல் கொழும்பு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புமென மக்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் எதிர்பாராத முறையில் கொழும்பு மாவட்டத்தில் புதிதாக கொரோனா வைரஸ் சிலருக்கு தொற்று உறுதிப்படுத்த்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் 11 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையெனக் கூறப்படுகின்றது. இலங்கை மருத்துவர் சங்கம் இன்றிரவு கூடி ஆராய்ந்துள்ளது. நாளை புதன்கிழமையும் அரசாங்கத்துடன் நடத்தவுள்ள கூட்டத்தின் பின்னரே ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது குறித்து முடிவு செய்யவுள்ளது.
 
ராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவரும் முகத்துவாரம், மற்றும் கொல்லன்னாவை சாலமுல்ல பிரதேசங்களில் இரண்டு பேரும் இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்குழிய முகத்துவாரம் பிரதேசத்தில் 62 வயதான பெண் உயிரிழந்ததையடுத்து இந்த பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்த ஆயிரத்து 200 பேர் தனிடைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 11 ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த முடியாதென சுகாதாரப் பரிசோதகர்களும் கூறியுள்ளனர்.

இதனால் கொழும்பில் மக்களிடையே பதற்றமானதொரு நிலை ஏற்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கு உள்ளிட்ட ஏனைய மாகாணங்கள் 11 ஆம் திகதி முதல் வழமைக்குத் திரும்புமென கூறப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை இன்று வரை 765 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.