கொரோனா ரைவஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில்

வடமாகாணத்தில் இலங்கை இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் அதிகரிப்பு

மகிந்த ராஜபக்ச முன்னிலையில் சிறிதரன்
பதிப்பு: 2020 மே 06 21:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 07 21:18
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வரும் வரையும் இலங்கை இராணுவத்தின் இறுக்காமான சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்குவதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளார். வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் போர்க்கால நிலைமை போன்று இராணுவம் செயற்படுவதாகவும் சிறிதரன் குற்றம் சுமத்தியிருக்கிறார். மகிந்த ராஜபக்சவை கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்தில் சென்ற திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருந்தது. இதன்போதே சிறிதரன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்வாறான இறுக்கமான சோதனை நடவடிக்கைகள் வவனியாவில் இருந்து கொழும்பு வரும்போது இல்லை. வடக்குக் கிழக்கு மாகாணம் தவிர்ந்த வேறெந்த மாகாணங்களிலும் இவ்வாறான கடுமையான சோதனை நடவடிக்கைகள் இல்லை.

ஆகவே இ;ந்தச் செயற்பாடு அடிப்படை மனித உரிமை மீறல் என்றும் சட்ட ஆட்சிக்கு மாறானது எனவும் கூறி கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் சட்டத்தரணி சுமந்திரனால் முறையிட முடியாதா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கில் சிவில் நடவடிக்கைகளில் தலையிடுகிறது என்றும் இராணுவ நிர்வாகமே அங்கு இடம்பெறுவதாகவும் மக்கள் பலரும் நீண்டகாலமாகவே அவ்வப்போது குற்றம் சுமத்துகின்றனர். ஆகவே கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை சட்டவலுவுள்ளதாக வேண்டுமெனக் கோரி, மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியுமென்றால் தமிழ் மக்கள் சார்ந்த இந்த விடயம் தொடர்பாக ஏன் முறைப்பாடு செய்ய முடியாமல் போனது என்பது தொடர்பான கேள்விகள் எழுகின்றன.

ஊரடங்குச் சட்டத்தை சட்ட வலுவுள்ளதாக்கிச் சட்ட ஆட்சியை நிலை நிறுத்துமாறும் அந்த முறைப்பாட்டில் சட்டத்தரணி சுமந்திரன் கோரியுள்ளார். மக்களைப் பாதுகாப்பதற்கே இந்த ஊரடங்குச் சட்டம். இது போர்க்காலச் சட்டமல்ல. கொரோன வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற எந்தவகையிலேனும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்லடுத்தினாலே போதும். அது சட்ட வலுவுடையதாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதல்லாம் பிரச்சினையல்ல.

சட்டம் மக்களுக்கானது மக்களின் பழக்க வழக்கங்களில் இருந்தே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆகவே எனவே மக்களும் கல அரசியல் கட்சிகளும் அதனi ஏற்றுக் கொண்டு வீடுகளுக்குள் தாமாகே முடங்கியிருக்கின்றனர். ஆகவே இது மக்களுக்கான ஊரடங்குச் சட்டம்தான்.

இந்த நிலையில் ஊரடங்குச் சட்டம் பற்றிய சட்டத்தரணி சுமந்திரனின் சந்தேகமும் முறைப்பாடு தற்போதைய சூழலில் யாரோவொரு சிங்கள அரசியல் தலைவரைத் திருப்திப்படுத்தும் அரசியல். ஆனால் இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகளில் இல்லாத இராணுவச் சோதனைச் சாவடிகள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறித்து முறைப்பாடு செய்ய விருப்பமில்லாமல் போனதேன்?

இலங்கை நீதித்துறை. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற சுயாதீன அரச நிறுவனங்கள், ஈழத் தமிழர் நலன்சார்ந்து தீர்ப்பு வழங்குமா என்ற கேள்விகளுக்கு அப்பால் குறைந்த பட்;டசம் இவ்வாறான அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டால் அது பேசுபொருளாகும்.

ஆனால் ஈழத் தமிழர் சார்ந் விடயங்களை பேசுபொருளாக்காமல், சிங்கள அரசியல் தலைவர்களின் நலன்கள் சார்ந்த விடயத்தில் அல்லது சிங்கள மக்களுக்குமான அடிப்படை உரிமைகள், ஜனநாயகம் பற்றி பேசுவதென்பது எந்தவகையான அரசியல் என்ற கேள்விகள் எழாமலில்லை.

தமிழ்த் தேசியக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் செல்வம் அடைக்கலநாதன், சித்தாத்தன் ஆகியோர் கூட சுமந்திரனின் இவ்வாறான அரசியல் செயற்பாடுகள் குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை? வீட்டுச் சின்னத்தில் போட்டியிட இடம் கிடைக்காது என்பதாலா?

ஊரடங்குச் சட்டத்தை சட்ட வலுவுள்ளதாக்கிச் சட்ட ஆட்சியை நிலை நிறுத்துமாறும் சுமந்திரன் தனது முறைப்பாட்டில் கோரியமையானது, இலங்கையில் சட்ட ஆட்சியே இல்லையென்பதை கோடிகாட்டியுள்ளது. அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர்கள் பலர் அது குறித்த கேளவிகளை ஏற்கனவே எழுப்பிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.