இலங்கையில்

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் அமைச்சின் செயலாளர்களாக நியமனம்

வடக்குக் கிழக்கில் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடுகள் பற்றிக் கண்டுகொள்ளாத எதிர்க்கட்சிகள்
பதிப்பு: 2020 மே 14 23:12
புதுப்பிப்பு: மே 14 23:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவ அதிகாரிகள் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சிவில் நடவடிக்கைகளில் தலையிடுவதாகப் பலவேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால் பதவிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எதனையுமே எடுக்கவில்லை எனவும் மாநாக மாவட்ட அரசாங்க அதிபர்கள் கூடச் சிங்களவா்களாக நியமிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த நிலையில் கொழும்பில் அமைசின் செயலாளர்களாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக பிரதான எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. ஆனால் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இராணுவத்தினர் சிவில் சேவைச் செயற்பாடுகளில் தலையிடுகின்றமை தொடர்பாகச் சிங்கள எதிர்க்கட்சிகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிட்டு இலங்கையை சுமுகமான நிலைக்குக்குள் கொண்டு தேர்தலை நடத்தும் நோக்கிலேயே சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியிருந்தார்.

ஆனால் இன்று வியாழக்கிழமை அதற்கு மறுப்பு வெளியிட்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் சிறந்த சமுக சேவையாளர்கள் என்று கூறியுள்ளார். ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளைக் கொண்டு சேவை செய்வதன் மூலம் மக்கள் கூடுதல் பயன்களை அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன. அவசரகாலச் சட்டத்தை அமுலப்படுத்த வேண்டிய தேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். சிவில் சேவைகளின் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க முடியாதென்றும் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வரும் வரை. இலங்கை இராணுவத்தின் சோதனைச்சாவடிகள் அதிரிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நேரடியாகவே முறையிட்டுமிருந்தார்.

ஆனால் இதுவரையும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அங்காங்கே ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனைத் தடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவம் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.