இனப்படுகொலைக்கு

சர்வதேச நீதிகோரி முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

முல்லைத்தீவில் பொலிஸார் ஏற்பாட்டாளர்களை அழைத்து விளக்கம்
பதிப்பு: 2020 மே 17 22:37
புதுப்பிப்பு: மே 17 22:49
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை இராணுவத்தினரால் ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளான நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை அனுஷ;டிக்கப்படவுள்ளது. நாளை பதினொராவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஒன்று கூடி நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கொள்வர். தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகோரி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென மக்கள் கடந்த நிகழ்வின் போது பிரகடணம் செய்திருந்தனர். வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தின் சுயாட்சிக்கும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்த ஆண்டு நிகழ்விலும் பொதுமக்கள் அவ்வாறு கோரிக்கை விடுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
 
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெறும் என நினைவுகூரல் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட இலங்கைப் பொலிஸ் அதிகாரிகள் தங்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாகக் கேட்டதாகவும் அருட்தந்தை தெரிவித்தார். நிகழ்வுகள் தொடர்hக தாங்கள் விளக்கமளித்ததாகவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பாதுகாப்புத் திட்டத்திற்கு அமைவாக நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் அக வணக்க நிகழ்வுகளின் பின்னர் கொள்கைப் பிரகடணம் ஒன்று வெளியிடப்படவுள்ளதாகவும் அருட்தந்தை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலும் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு. அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகோரவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ;.