இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம்-

கொழும்பு, கம்பகா மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு- போக்குவரத்துகள் இல்லை

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை
பதிப்பு: 2020 மே 25 23:45
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 26 11:59
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இரண்டு மாதங்களின் பின்னர் நாளை செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு, கம்பகா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கச் சட்டம் தளர்த்தப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கை முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுப் பின்னர் கொழும்பு, கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை ஊரடங்குச் சட்டத் தளர்த்தப்பட்டாலும் கொழும்பில் இருந்து கம்பகா தவிர்ந்த ஏனைய வெளி மாட்டங்களுக்கு எவரும் செல்ல முடியாதென்றும் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும் எனவும் அரசாங்கம் அறிவித்தள்ளது.
 
ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை. நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் நோக்கில் அரசாங்கம் அவசர அவசரமாக ஊரடங்கச் சட்டத்தைத் தளாத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரே தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதியை அறிவிக்க முடியுமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.