இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்

தேர்தல் பிரச்சாரத்தில் அரச வளங்கள் துஸ்பிரயோகம்- ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

கண்காணப்பு நிறுவனங்கள் தகவல்
பதிப்பு: 2020 ஜூன் 12 22:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 14 23:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#sl
#parliament
#election
ஒற்றையாட்சி அரசின் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரச சொத்துக்களை பயன்படுத்துவதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் அரசசார்பற்ற நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. அரச திணைக்களங்கள். அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றுக்குச் சொந்தமான வாகனங்கள், தளபாடங்கள், மண்டபங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்படுவதாகவும் தற்போது காபாந்து அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலர் இவ்வாறு அரச வளங்களைத் துஸ்பிரயோகம் செய்வதாகவும் தேசிய சமாதானப் பேரவை, மாற்றுக் கொள்கை மையம் ஆகிய நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
 
இது தொடர்பாக இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரச திணைக்கங்களுக்கச் சொந்தமான நிதியிலேயே வாகனங்களுக்கான எரிபொருட்களும் நிரப்பப்படுவதாகவும் இது தொடர்பான மதிப்பீடு ஒன்றை செய்ய வேண்டுமெனவும் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் இந்த நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி.ஆகிய கட்சிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளது. இது தெடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் தேர்தல் பிரச்சாரங்களின்போது முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவியளிப்பதாக கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது