இலங்கை ஒற்றையாட்சி அரசின்

மாகாண சபைகளைக் கைவிட ராஜபக்ச அரசாங்கம் ஆலோசனை

இரண்டு வருடங்களாகத் தேர்தல் நடத்தப்படவில்லை- இது சட்டச் சிக்கல் என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு
பதிப்பு: 2020 ஜூன் 21 21:22
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 21 21:45
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையை இலங்கை அரசாங்கம் கைவிடக் கூடிய நிலை இருப்பதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக வடக்குக்- கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படவில்லை. இது சட்டச் சிக்கலை ஏற்படுத்துமென இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அது தொடர்பாகப் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் எதுவுமே கருத்தில் எடுக்கவிலலையெனக் கூறப்படுகின்றது.
 
ஈழத் தமிழ் மக்களின் எழுப ஆண்டுகால அரசியல் விடுதலைக்கான நிரந்தரத் தீர்வு 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் ஒரு தசாப்த காலம் சென்று விட்ட நிலையிலும் இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

குறைந்தபட்சம் முதற்கட்டத் தீர்வு கூட அல்லது போரின் பக்க விளைவுகளுக்குக் கூட உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்ததும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படுமெனப் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறுகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பாராக இருந்தால் அவருடைய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முடியுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.

இங்கே கேள்வி என்னெவென்றால், நல்லாட்சி எனக் கூறி 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம், புதிய அரசியல் யாப்புக்காக நகலச்; சட்டவரைபு ஒன்றைத் தயாரித்திருந்தது. அந்த நகல் வரைபுக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இருப்பதாகவும் குறிப்பாக ஒற்றையாட்சிக்குள் சமஸ்டித் தீர்வு இருப்பதாகவும் தமிழ் மக்களுக்குக் கதை சொல்லப்பட்டது.

ஆனால் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் ராஜபக்ச அரசாங்கம் பதவியேற்றதும், அனைத்து முயற்சிகளும் கைவிட்டன. புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபைக் கொண்டு வந்த சிங்கள அரசியல்தலைவர்கள்கூட அது பற்றி வாயn திறக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழலிலேதான் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளது. ஆகவே தேர்தல் நடைபெறவுள்ளமையினலேயே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கள் அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றன என்று கூறலாம். அது பற்றித் தமிழ்க் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக வியாக்கியானம் செய்;கின்றன.

தேர்தல்காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் பின்னர் அது கைவிடப்படுவதும் வழமைதான். ஆனால் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களில் முன்னுக்பின் முரணான கதைகளைக் கூறி மேலும் எழுபது ஆண்டுகள் காத்திருக்கச் செய்ய வேண்டாமென்பது தமிழ் மக்களின் மன உணர்வுகளாகும்.

அந்த மன உணர்வுகளையும் போரின் வலிகளையும் தமிழ்ப் பிரதிநிதிகள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்றக் கதிரையை எட்டிப் பிடிப்பதற்காக தமிழ் இளைஞர்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான உசுப்பேத்தும் வார்த்தைகளைக் கொட்டக் கூடாது.

பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சலுகை, நிவாரண அரசியலுக்கு மக்களைப் பழக்குகின்றனர். அதாவது சலுகைகளை வழங்கினால் தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று அவர்கள் நம்புகின்றனர்.

பிரதான சிங்கள அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றுபவர்கள். ஆகவே அவர்களினால் சலுகைகள், நிவாரணங்களை வழங்க முடியும். ஏன் குறிப்பிட்டளவு வேலை வாய்ப்புகளையும் அவர்களால் வழங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆகவே இதுவரைகாலமும் அசைக்க முடியாத கொள்கைப் பிடிபோடு வாக்களித்த ஈழத்தமிழ் மக்கள்.

வேலை வாய்ப்புகள், சலுகைகள், நிவாரணங்கள் ஆகியவற்றை எதிர்பார்த்து பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் நிலைமை எதிர்காலங்களில் உருவாகலாம். இவ்வாறானதொரு அபாயகரமான சூழலில் தமிழ்க் கட்சிகளும் மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை வழங்கினால் என்ன நடக்கும்? வடக்குக் கிழக்குத் தாயகத்துக்கு வெளியே வாழும் ஏனைய சமூகங்களைப் போன்று தாயகத் தமிழ் மக்கள் ஒருபோதும் சலுகைகள், நிவாரணங்களுக்கு அடிமைப்பட்டு வாக்களித்தவர்கள் அல்ல.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழல் அவ்வாறானதொரு ஆபத்தான நிலை தோற்றம் பெறுவதை அவதானிக்க முடிகிறது. இனப்பிரச்சினைக்கு மாகாண சபைமுறை தீர்வு அல்ல. ஆனாலும் குறைந்த பட்சம் அந்த மாகாண சபைத் தேர்தல்களை ஏன் நடத்தவில்லை என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்காலாம். ஜெனீவா மனித உரிமைச் சபையின் 2015 ஆம் ஆண்டு 30-1 தீர்மானத்தில் கூட மாகாண சபைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரைக்கும் எவரும்; இந்த விடயம் தொடர்பாக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. தேர்தலில் மாத்திரமே கவனம் செலுத்துகின்றன. வெற்றிபெற்றதும் அரசியல் தீர்வை முன்வைப்போம் என்று கூறுகின்ற பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட மாகாண சபைகளுக்கான 13 ஆவது திருத்த்தச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவது பற்றி வாய்திறக்கவில்லை.