இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க இந்தியா தவிர்ந்த தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் வருவர்

தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடியது
பதிப்பு: 2020 ஜூன் 24 22:16
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 24 22:30
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#parliament
#election
நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக சர்வதேசக் கண்காணிப்பாளர்களை வரவழைப்பது தொடர்பாக இலங்கைச் சுயாதீனதட் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான இலங்கைச் சுகாதார அமைச்சின் அறிவறுத்தல்களுக்கு அமைவாக சர்வதேசக் கண்காணிப்பாளர்களை வரவழைப்பதென ஏற்கனவே திர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரவில்லையென்பதால் இந்தியா தவிர்ந்த ஏனைய தெற்காசிய நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்களை வரவழைப்பது குறித்து Nணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆலோசித்துள்ளார்.
 
ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்தியா மற்றும் iரோப்பிய நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்களை வரவழைப்பில் உள்ள சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை. இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகளை அழைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளும் அலோசனைகளை முன்வைத்துள்ளதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.