வடமாகாரணம்

வவுனியா குருமன்காட்டுப் பிரசேத்தில் புதிய இராணுவச் சோதனைச்சாவடி

மக்கள் முறைப்பாடு
பதிப்பு: 2020 ஜூலை 06 22:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 06 22:58
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடமாகாணம் வவனியா மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம்முள்ள வவுனியா குருமன்காட்டுப் பிரதேசத்தில் புதிதாக இராணுவச் சோதனைச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனமடைந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமள்ள இந்தப் பிரதேசத்தில் இராணுவச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் அன்றாடத் தேவைகளுக்காகச் சென்றுவரும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறு இராணுவச் சோதனைசச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் முறையிட்டுள்ளனர்.
 
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச்சாவடியில் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டுச் சோதனையிடப்படுவதாகவும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள பிரதேசங்களில் திடீர் திடீரன இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளிலில் ஈடுபடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டுள்ள மக்கள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்தில் புதிய இராணுவச் சோதனைச்சாவடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இது புதிய இராணுவச் சோதனைச் சாவடி அல்ல என்றும் மக்களுக்காக அவ்வப்போது சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் கூறியள்ளார்.