ஈழத் தமிழ் மக்கள் மீதான இலங்கை ஒற்றையாட்சி அரசின்

அடக்குமுறைக்கு எதிராக தாயகப் பிரதேசங்களில் கடையடைப்புப் போராட்டம்

பாடசாலைகள், அரச நிறுவனங்கள் செயலிழந்தன- முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் முடப்பட்டன
பதிப்பு: 2020 செப். 28 21:43
புதுப்பிப்பு: செப். 28 22:18
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்ற முழுமையான கடையடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. பத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தின்போது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் செயழிந்தன. வர்த்தக நிலையங்கள், சந்தைகள் அனைத்தும் மூடப்படிருந்தன. இலங்கை இராணுவத்தின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் போராட்டம் இடம்பெற்றது. வர்த்தக நிலையங்களைத் திறக்குமாறு இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தபோதும், உரிமையாளர்கள் எவரும் அதற்குச் செவிசாய்க்கவில்லை.
 
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவனியா ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் மாத்திரம் ஆங்காங்கே சில வர்த்தக நிலையங்கள் இராணுவத்தின் அச்சுறுத்தல்களினால் திறக்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் முற்றாகச் செயலிழந்தன. வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களைத் திறக்குமாறு அச்சுறுத்தியதோடு சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டனர். ஆனாலும் சிறிய பெரிய வர்த்தக நிலையங்கள் எதுவுமே திறக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர் ஆனாலும் அனைத்துக் கடைகளும் முடப்பட்டிருந்தன.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீமன்றம் விதித்திருந்த தடைகளுக்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றிருந்தன.

ஆனாலும் அவ்வாறு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவே இன்று திங்கட்கிழமை கடையடைப்புப் போராட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டம் வெற்றியென பத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அறிவித்துள்ளன.