இலங்கைக்கு

பிசிஆர் பரிசோதனைகளின்றி சீனத் தூதுக் குழுவினர் வருகை

ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட அரச உயரதிகள் பலரோடும் சந்திப்பு
பதிப்பு: 2020 ஒக். 09 22:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 09 23:13
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கைக்கு வருகை தந்துள்ள 26பேர் கொண்ட சீனத்தூக்குழுவுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பிரிசோதனைகூட செய்யப்படவில்லையென எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, சீனக்குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கியது யார் என்றும் கேள்வி தொடுத்தார். முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ் கட்சியின் உயர் மட்ட அதிகாரியுமான யாங் ஜீயேஷ தலைமையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள 26 பேர் கொண்ட தூதுக்குழு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியேர் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளனர்.
 
பிசிஆர் பரிசோதனைகள், 14 நாள் தனிமைப்படுத்தல் எதுவுமேயின்றி இந்தக் குழுவினர் இலங்கைக்குள் பிரவேசித்ததுமட்டுமல்லாது, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் சந்தித்தமை எந்த அடிப்படையில் என்றும் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள் அரசாங்கம் உரிய விளக்கம்தர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன.

சீனாவிலிருந்து இலங்கைக்கு நேற்று வியாழக்கிழமை இரவு வருகைதந்த 26 பேரடங்கிய தூதுக் குழுவை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

சீனக் குழுவினர் இலங்கைக்கு வரும்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோசதனை மாத்திரம் இடம்பெறுமெனவும் அந்தக் குழுவினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்றும் சுகாதா அமைச்சர் பவித்திர வன்னியாராட்சி நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.

ஆனால் இலங்கைக்கு வருகை தந்த சீனக்குழுவினர் பிசிஆர் பிரிசோனைக்கு உட்படுத்தப்படாமலேயே வருகை தந்துள்ளனர். இந்தக் குழுவினர் மூன்று நாட்கள் கொழும்பில் தங்கியிருப்பர்.

இலங்கையின் சுகாதார நிலமைகள், குறிப்பாக கொரோன பரவலைக் கட்டுப்படுத்தும் ஆலோசனைகள், மற்றும் அதற்குரிய மருத்து உதவிகள் தொடர்பாக ஆராயவுள்ளனர். சீனக்குழுவில் சீன மருத்துவர்கள் சிலரும் உள்ளடங்கியிருப்பதாக இலங்கைச் சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, சீனாவிடமிருந்து பெற்ற கடன்களால் இலங்கை கடன்பொறிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பலர் கூறினாலும், நாட்டின் அபிவிருத்திகள் மக்களின் ஜீவநோபாயம், பொருளாதாரத்தை உயர்த்த உதவியாக இருந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சீனத் தூக்குழுவுடன் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் கூறியுள்ளார்.

சீன அரசாங்கம் எதிர்காலத்திலும் இலங்கைக்கு உதவியளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்த கோட்டாபய, கடந்த போர்க்காலத்தில் சீனா வழங்கிய உதவிகளையும் நினைவுப்படுத்தினார்.