வரதன் என்பவரைக் கொழும்புக்கு அழைத்து வந்து ஜேக்கப் மேரியம்மாவின் கொட்டகலையில் கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கவைத்தார் என்ற குற்றச்சாட்டிலேயே சந்திரசேகரன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டடிருந்தார்.
அடைக்கலம் கொடுத்த ஜேக்கப் மேரியம்மாவும் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
குண்டுத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த வரதன் என்பவரைக் கிளிநொச்சியில் இருந்து அழைத்து வந்து கொட்டகலையில் தங்கவைத்த குற்றச்சாட்டில் பெ.சந்திரசேகரன், பி.ஏ.காதர், வி.டி.தர்மலிங்கம் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
மலையகத் தொழிற்சங்கவாதியான தோழர் ராஜாராம், அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஜேக்கப் மேரியம்மா கிட்டத்தட்ட தனது வாழ்நாளின் அரைவாசிப் பகுதி வாழ்க்கையை சிறையிலேயே கழித்தார்.
சிறைச்சாலையில் இருந்து அவர் விடுதலை பெற்றதும் தனது கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வந்து, மீண்டும் தோட்டத் தொழிலலில் ஈடுபட்டார். இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவருடைய இல்லத்திற்குச் சென்று தான் பார்வையிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழவிடுதலைப் போராட்டத்திற்காகத் தியாகம் செய்தவர்களில் ஜேக்கப் மேரியம்மாவும் ஒருவர் என்று தனது பதிவில் திலகராஜ் கூறியுள்ளார். 1980, 90களில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் மலையகத் தமிழ் இளைஞர்கள் பலரும் பங்களிப்புச் செய்திருந்தனர்.
சனியன்று உயிரிழந்த மேரியம்மாவின் புகழுடலுக்குத் தமிழ்த்தேசியக் கட்சி உறுப்பினர்கள் எவரும் நுவரெலியாவுக்குச் சென்று அஞ்சலி செலுத்த முடியாத சூழல் இருந்தாலும், அனுதாபக் குறிப்புகளைக் கூடஊடகங்களில் அவர்கள் வெளியிடவில்லை.
குறித்த விடயம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த சந்திரசேகரன் விடுதலை பெற்று வெளியே வந்ததும், மலையக மக்கள் முன்னணி என்ற தொழிற் சங்கம் ஒன்றை அமைத்து அதனை அரசியலிலும் ஈடுபடுத்தி, 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக நுவரெலியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
பின்னர் சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து பிரதியமைச்சர் பதி ஒன்றையும் பெற்றிருந்தார்.