இலங்கை ஒற்றையாட்சியை மேலும் உறுதிப்படுத்த

பௌத்த தேசியக் கொடியோடு கொழும்பில் சுதந்திரதின நிகழ்வு

பௌத்தனாகவே ஆட்சி செய்வேன் என்றும் சூழுரைத்தார் கோட்டா
பதிப்பு: 2021 பெப். 04 23:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 08 21:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்பில் இன்று இடம்பெற்ற இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின வைபம் ஈழத் தமிழர்களைப் போரில் வெற்றிகொண்ட நிகழ்வாகவே காண்பிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் தேசியக் கொடியோடு பௌத்த சமயக் கொடியும் இராணுவத்தின் போர் வெற்றியைக் குறிக்கும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. கொழும்பு -07 இல் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.
 
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. சுதந்திர தின நிகழ்வுகளின் போது பௌத்த தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்தமை இதுவே முதற் தடவையாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பௌத்த தேசிய கொடி ஏற்றப்பட்டிருக்கவில்லை.

அதேவேளை, இன்று மாலை நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக இருக்கும் போரில் உயிர் நீத்த படையினரின் நினைவுத் தூபிக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கு அஞ்சலி செலுத்தினார்.

பௌத்த பிக்குமார் பலரும் பங்குபற்றியிருந்தனர். சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச இலங்கை பௌத்த நாடு என்று பல தடவை கூறியிருந்தார். பௌத்த சமயத்தவனாகவே இலங்கைத் தீவை ஆட்சி செய்வேன் என்றும் கூறினார்.

இனப்பிரச்சனை இருப்பதாகவோ, அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்றோ எதுவுமே அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.