வடமாகாணம் மன்னாரில்

தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாட்டை உருவாக்கும் பொதுஜன பெரமுன

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அறியாமல் செயற்படுகின்றாரா?
பதிப்பு: 2021 மார்ச் 01 14:52
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 02 01:24
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈபடுபட்டு வரும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் முரண்பாடுகள் மன்னார் மாவட்டத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் முரண்பாடுகள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுன கட்சியின் நான்காவது வருட சம்மேளன மாநாடு சென்ற சனிக்கிழமை மன்னாரில் நடைபெற்ற நிலையில் குறித்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதைப் புறக்கணித்துள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவிக்கின்றன.
 
மன்னார் நகர மண்டபத்தில் பொதுஐன பெரமுன கட்சியின் நான்காவது வருட இளைஞர் சம்மேளன மாநாடும் பொதுக்கூட்டமும் நடைபெற்ற நிலையிலேயே குறித்த கட்சியின் மன்னார் அமைப்பாளர் செல்வராசா செல்வக்குமரன் உட்பட பொதுஜன பெரமுனையின் மாவட்ட நிருவாகிகள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் குறித்த மாநாட்டையும் பொதுக்கூட்டத்தையும் புறக்கணித்துள்ளனர்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான காதர் மஸ்தானின் ஏற்பாட்டில் மேற்படி சம்மேளன மாநாடு நடைபெற்றது. அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் எஸ். செல்வக்குமரன் உட்பட குறித்த கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர் மேற்படி மாநாட்டை முற்றாகப் புறக்கணித்துள்ளனர்.

பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்டவேளை மன்னார் மாவட்டத்தில் அக் கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் எஸ். செல்வக்குமரன் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அக்கட்சியின் மன்னார் அமைப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

எனினும் கடந்த பொதுத் தேர்தலில் பொதுஐன பெரமுன சார்பில் வன்னியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காதர் மஸ்தான், தான் முன்பு அங்கம் வகித்த சுதந்திரக்கட்சியின் செயல்பாடுகளைக் கைவிட்டு பொதுஜன பெரமுன கட்சி செயற்பாடுகளை வன்னியில் முன்னெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் மன்னார் அமைப்பாளர் எஸ்.செல்வக்குமரன் உட்பட பொதுஜன பெரமுனவின் ஆரம்ப கால முக்கியஸ்தர்கள் பலர் தற்போது மஸ்தானால் ஓரம் கட்டப்படுவதாக மூத்த உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் பல்துறை அபிவிருத்திச் செயலணி மூலம் குறைந்த வருமானமுடையவர் களுக்கு வழங்கப்படும் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நியமன ஒதுக்கீட்டிலும் தாங்கள் காதர் மஸ்தானால் கழட்டிவிடப் பட்டுள்ளதாகக் கூர்மைக்கு அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இவ்வாறான அரசின் பல வேலைத்திட்டங்களில் தமக்கு எவ்வித ஒதுக்கீடுகளும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர்கள் மேலும் குறிபிட்டுள்ளனர்.

மேலும் பொதுஜன பெரமுனவின் கட்சி செயல்பாடுகளில் தம்மை இணைத்துக்கொள்ளாமல் காதர் மஸ்தான் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் இவ்வாறான செயல்பாடுகளுக்குத் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்கும் வகையிலேயே தாம் மன்னாரில் கடந்த சனியன்று நடந்த நான்காவது வருட சம்மேளன மாநாட்டை முற்றாகப் புறக்கணித்ததாகவும் அவரகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளைத் தூண்டிப் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாயகப் பிரதேசங்களில் வாழும் மக்கள் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்களக் கட்சிகளோடு சேர்ந்து செயற்படுவதைக் காலம் காலமாகவே தவிர்த்து வருகின்றனர். ஆனாலும் குறிப்பிட்ட சிலர் வேறு சில ஆதாயங்கள் காரணமாகச் சேர்ந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.