ஊடகத்துறைக்கு எச்சரிக்கை

கடத்தியவர்கள் யாரெனத் தெரியும் என்கிறார் விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சுஜீவ

நீதிமன்ற விசாரணையில் வெளிப்படுத்தவுள்ளதாகவும் கூறுகிறார்
பதிப்பு: 2021 மார்ச் 20 21:12
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 21 03:28
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த முக்கியமான ஒலிநாடா ஒன்றை பெற்றுக்கொள்ளவே தான் கடத்தப்பட்டதாக ஊடகவியலாளர் சுஜீவ கமகே தெரிவித்துள்ளார். சென்ற பத்தாம் திகதி கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குறித்த ஊடகவியலாளர் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இதன்போது தான் கடத்தப்பட்ட முறை தொடர்பாக சுஜீவ கமகே விளக்கமளித்தார். தான் பணியாற்றும் சியரட்ட என்ற செய்தி இணையத்தளத்திற்குத் தான் எழுதுவதற்காகச் சேர்த்து வைத்திருந்த அரசாங்கம் பற்றிய ஒலிநாடாவை அழிப்பதே கடத்தல்காரர்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
 
கறுப்பு நிற வாகனம் ஒன்றில் தன்னைக் கடத்தி சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை செய்ததாகவும் சித்திரவதை தாங்க முடியாத நிலையில் தன்னிடம் இருந்த குறித்த ஒலிநாடாவை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்ததாகவும் சுஜீவ கமகே தெரிவித்தார்.

தன்னைக் கடத்தியவர்கள் யார் என்று தனக்குத் தெரியுமெனவும் நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையின்போது முழு விபரங்களையும் தான் வெளிப்படுத்துவேன் எனவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரான சுஜீவ கமகே தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். ஊடகவியலாளர் சுஜீவ கமகே முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சென்ற ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான சமூகநீதி என்ற அமைப்பின் பிரதான உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அதிகாரபூர்வமாக எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால் கடத்தல்காரா்களினால் விடுவிக்கப்பட்ட சுஜீவ கமகே பொலிஸாரால கைது செய்யப்பட்டு சுமார் நான்கு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.