மலையகத்தில்

சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் மீது புலனாய்வுப் பொலிஸார் விசாரணை

பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு
பதிப்பு: 2021 மே 04 23:03
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 05 21:34
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
மலையகத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாழும் மாற்றுச் சிந்தனை கொண்ட இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மற்றும் ஆசிரியர்கள் என பலரும் இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கண்காணிப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. இவ்வாறான விசாரணைகள், கண்காணிப்புகளினால் தாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைச் சட்டத்தரணிகளிடம் முறையிட்டுள்ளனர்.
 
தங்களது வீடுகளுக்கும், தொழில் செய்யும் நிறுவனங்களுக்கும் மோட்டார் சைக்களில்கள் உள்ளிட்ட வாகனங்களில் வருவோர், தங்களைப் புலனாய்வுப் பொலிஸார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு விசாரணை செய்வதாகக் கூறியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் மலையகப் பகுதிகளில் இயங்கும் சுயாதீனமானக் குழுக்கள், அமைப்புக்களின் தகவல்கள் திரட்டப்படுவதாகக் கூறியே தங்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பாதிக்கப்பட்டோர் தமது முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

மலையகத்தில் இயங்கும் சில அரசியல்வாதிகளையே இவ்வாறான விசாரணைகளுக்குக் காரணம் என்றும் புலனாய்வுப் பொலிஸாருக்கு அவர்களே தகவல் வழங்குவதாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.