அம்பாறை அன்னமலை 2இல்

மருத்துவ வசதிகள் சீரில்லை- தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் புறக்கணிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் அவலம்
பதிப்பு: 2018 ஜூலை 23 17:33
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 24 11:00
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் பேசும் மக்களின் தாயகமான அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்னமலை 2ல் இருக்கும் மத்திய மருந்தகத்தின் கடமையாற்றும் வைத்தியர் உரிய நேரத்திற்கு வருகைதராமையினால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக கிராமவாசியான சி.அருள்பிரகாசம் தெரிவித்தார். அன்னமலை கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனைத்தும் இந்த மருந்தகத்தை நம்பித்தான் வசிக்கின்றார்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்கு செல்கின்றனர். எனினும் வைத்தியர் உரிய நேரத்தில் வருகைதராமையினால் நோயாளிகள் பெரும் ஏமாற்றத்துடன் வீடுதிரும்புகின்றனர்.
 
வைத்தியர் வருகை தாமதமடைந்தமையினால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியர் வீட்டுக்குச் சென்றுள்ளார். வைத்தியர் பெண் என்பதனால் அவரின் கணவர் வீட்டுக்குச் சென்றவரை தாறுமாறாக திட்டித்தீர்த்துள்ளார்.

வைத்தியர் தங்குவதற்கான விடுதிவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட போதிலும் அந்த விடுதியில் அவர் தங்காது நகர் பகுதியில் தங்குகின்றார். இதனால் வைத்தியசாலைக்கு உரிய நேரத்திற்கு அவரால் சமூகளிக்கமுடியவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்து மக்கள் தமது மருத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மருந்தகம் உரிய நேரத்தில் இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்ட தமது பிரதேசத்திற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் வருவதில்லை என்றும் உதவிகள் கூடச் செய்வதுமில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால் இலங்கை இராணுவத்தின் உதவியை நாடவேண்டிய அவல நிலைமை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனையுடன் கூா்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.