வடமாகாணம்

மன்னார், கிளிநொச்சியில் இரண்டு நாட்களில் இரு சடலங்கள் மீட்பு

பொலிஸார் விசாரணை
பதிப்பு: 2021 மே 26 20:38
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மே 26 20:48
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வட மாகாணத்தில் மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களில் இரண்டு சடலங்களை இலங்கைப் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் ஒரு சடலமும் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திப்பகுதியில் உள்ள நீர் வாய்காலொன்றில் இருந்து ஒரு சடலமும் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது. மன்னார் தாழ்வுபாடு கடற்கரைப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை ஆண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் பொதுமக்களினால் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொலிஸாரும் சட்ட வைத்திய அதிகாரியும் தாழ்வுபாட்டில் கரையொதுங்கிய சடலத்தை செவ்வாய் அன்று பார்வையிட்டதுடன் குறித்த சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் கையளித்துள்ளனர்.
 
உருக்குழைந்த நிலையில் காணப்பட்ட மேற்படி சடலம் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் ரி-3 பகுதியில் உள்ள கோவிந்தன் கடைச் சந்திக்கு அருகாமையில் உள்ள இரணைமடு நீர் வாய்க்காலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கடந்த செவ்வாய் காலை இலங்கைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கிளிநொச்சி திருவையாறுப்பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய கே. வில்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொது வைத்தியசாலை அதிகாரியொருவர் கூர்மை செய்தி தளத்திற்கு தெரிவித்தார். மேலும் குறித்த நபர் வீதி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர் என வைத்தியசாலை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த நபர் மேற்படி நீர் வாய்க்காலில் குளிக்கும் சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேசமயம் மன்னார் கரிசல் காட்டுப்பகுதியில் ஆணொருவரின் சடலம் அண்மையில் மீட்க்கப்பட்டது. மிகவும் பழுந்தடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த சடலத்திற்கு உரியவர் மன்னார் தோட்டவெளியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதென மன்னார் பொது வைத்தியசாலையின் அதிகாரியொருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

குறித்த தோட்டவெளி நபர் கரிசல் காட்டின் நடுவே உறங்கியவேளை அரவம் தீண்டி மரணமடைந்துள்ளாக தெரிவிக்கபடுகிறது.