சீனாவுக்குச் சாதகமான இலங்கை ஒற்றையாட்சி அரசின்

போட் சிற்றிச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் கைச்சாத்திட்டார்

நேற்று வியாழக்கிழமை முதல் நடைமுறையில்
பதிப்பு: 2021 மே 28 20:28
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 28 20:43
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
கொழும்பு போட் சிற்றி என அழைக்கப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தைக் கையாள்வதற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்துக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன இன்று கையொப்பமிட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமையில் இருந்து சட்டமூலம் நடைமுறைக்கு வருமென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சட்டமூலம் கைச்சாத்திடப்பட்டபோது சீனத் தூதரக அதிகாரிகள் சிலரும் சமுகளித்திருந்ததாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே சீனச் சட்ட அறிஞர்குழு ஒன்று கொழும்புக்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று சட்டமூலத்துக்குச் சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார்.
 
குறித்த பொருளாதார ஆணைக்குழுவில் எட்டு உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர் எனவும் அந்த எட்டு உறுப்பினர்களும் சீன அதிகாரிகளாகவே இருப்பர் என்றும் சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நியமனத்தை இலங்கை ஜனாதிபதியே மேற்கொள்வார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் ஆகியோர் குறித்த பொருளாதார ஆணைக்குழுவில் உறுப்பினராக அங்கம் வகிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் அதனை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இந்த பொருளாதார ஆணைக்குழவில் இடம்பெறத் தவறியமை ஆபத்தானதென்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா நாடாளுமன்ற விவாதத்தில் கூறியிருந்தார்.